rss
twitter
    Find out what I'm doing, Follow Me :)

பாலக் பனீர்


சப்பாத்திக் கச்சேரிக்கு அருமையான பக்கவாத்தியம்.

பாலக் கீரை / பசலைக் கீரை - ஒரு கட்டு
பனீர் கட்டி - நூறு கிராம்
பெரிய வெங்காயம் - 2
பூண்டு - 5 பல்
இஞ்சி - சுண்டு விரல் நீளத் துண்டு ஒன்று
பச்சை மிளகாய் - 3
வெண்ணை (உப்பு போடாதது) - 3 டேபிள் ஸ்பூன்
உப்பு - 1 டேபிள் ஸ்பூன்
கடுகு - 1 டேபிள் ஸ்பூன்
ஜீரகம் - 1 டேபிள் ஸ்பூன்

கரம் மசாலா பொடி - 1 டேபிள் ஸ்பூன்
ரீபைண்டு எண்ணெய் - ஒரு பால் கரண்டி

பாலக் கீரையை நன்றாக அலம்பி சுத்தம் செய்து, வேக விட்டு மிக்சியில் குழைய அரைத்து வைத்துக் கொள்ளுங்கள். ஜாஸ்தி தண்ணீர் விட வேண்டாம்.

பன்னீரை க்யூப்-களாக / கொஞ்சம் நீளமாக நறுக்கிக் கொண்டு, நான்-ஸ்டிக் (அல்லது) இன்டாலியம் தவாவில் (தோசைக் கல்) வைத்து, ஒவ்வொன்றைச் சுற்றியும் துளித் துளியாய் எண்ணெய் விட்டு மிதமான தீயில் எல்லாப் பக்கமும் பொன்னிறமாகும் வரை மெதுவாக திருப்பி விட்டு தனியாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

பச்சை மிளகாய்-இஞ்சி-பூண்டை நல்ல விழுதாக அரைத்துக் கொள்ளுங்கள்.

வாணலியில் கடுகு ஜீரகம் தாளித்து, பொடியாக நறுக்கிய வெங்காயத்தை போட்டு சிவக்க வதக்கிக் கொள்ளுங்கள்.

அடுப்பை மிதமான தீயில் வைத்துக் கொண்டு, மீதி எண்ணெயை விட்டு, கரம் மசாலா, இஞ்சி பூண்டு மிளகாய் விழுது, உப்பு, எல்லாவற்றையும் போட்டு, பச்சை வாசனை போய், லேசாய் எண்ணெய் பிரிந்து வரும் வரை வதக்கவும்.

இதில் அரைத்து வைத்த பாலக் கீரையை போட்டு நன்றாக கலந்து விடவும்.

ஐந்து நிமிஷத்தில் கலவை நன்றாக இறுகி கொண்டு விடும். அப்போது அடுப்பை அனைத்து விட்டு, வறுத்து வைத்திருக்கும் பனீர் கட்டிகளை போட்டு, மெதுவாக திருப்பி விடவும்.

சூடாக இருக்கும் போதே, வெண்ணையை ஊற்றி லேசாக கலந்து வைக்கவும். சாப்பிட்ட அப்புறமும் அற்புதமான வாசைனைக்கும், வயிறும் மனசும் நிறைஞ்சிருக்கவும் நான் காரண்டி.

இதில் பெருங்காயம் கருவேப்பிலை கொத்தமல்லி எல்லாம் தவறிக் கூட போட்டு விட வேண்டாம். இயல்பான மணத்தை கெடுத்து விடும்.

--