skip to main |
skip to sidebar
சினிமாவை பார்த்து மக்கள் கேட்டு போறாங்க அப்படினு மட்டும் தான் நாம கேள்வி படுறோம் இல்லையா..என்னைக்காவது ஒரு சினிமாவை பார்த்து மக்கள் திருந்திட்டங்கன்னு சொல்லி கேள்வி பட்டு இருக்கோமா??? இருக்கவே இருக்காது ...
நார்மலா நாம ஒரு படம் பார்த்தா ஒரு நாள் இல்லை ரெண்டு நாள் அந்த படத்தோட தாக்கம் இருப்பது உண்மை தான்..அதுவும் நல்லா படமாவோ இல்லை எதாவது ஒரு புது கதையோடு இருக்கற சினிமாவா இருந்தால் மட்டும்.. என்ன இப்ப எல்லாம் ஒன்னு மதுரை பேஸ் பண்ணி வருது. (கேட்டா செண்டிமென்ட்னு சொல்வாங்க.. இதனால இப்ப எல்லாம் மதுரைன்னு பேர கேட்டாலே வெறுப்பா இருக்கு) .இல்லை பாலின வன்முறைய பேஸ் பண்ணி வருது..() இந்த ரெண்டும் இல்லேன இருக்கவே இருக்கு லவ் ஸ்டோரி ...அதிலும் கூட காதலன் அல்லது காதலி கிளைமாக்சில் சாகறமாதிரி வருது ( பருத்தி வீரன் படத்தோட தாக்கம் இன்னும் போகல ). .இந்த மூணு கதைய விட்டா வேற என்ன வருது இப்ப வர்ற படத்துல.. .
இதையும் மீறி ஒரு சில நல்லா கதைகள் அப்போ அப்போ வருதுங்க நான் இலேன்னு சொல்லல ..
இப்படி இருக்கும் போது நான் நிறைய பேர பார்த்துட்டேன் ஒரு படம் பார்த்துட்டு அந்த படம் எடுத்த டைரக்டர் கூட யோசிச்சிருக்க மாட்டார் அந்த அளவுக்கு ஒவ்வொரு சீனுக்கும் ஒரு அர்த்தம் சொல்லி சண்டை வேற போடுவாங்க பாருங்க. .காமெடியா இருக்கும்.. குறிப்பா கமல் படம் வந்தால் போதும் "படத்தில் ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தை கேவல படுத்தறார் .. இன்னொரு சமுதாயத்தை உயர்வா சொல்றார்.." அப்படின்னு எல்லாம் சொல்வாங்க. .
ஏங்க ஒரு படத்த படமா பார்த்தா ஏன் இந்த பிரச்சினை எல்லாம் வருது.. அத நாம ஏன் பாடமா பார்க்கனும்..???.. எல்லாம் நம்மோட பார்வைல தான் இருக்கு..முடிஞ்சவரைக்கும் சினிமாவ ஒரு பொழுது போக்கு ஊடகமா வச்சிருக்கற வரைக்கும் தொல்லை இல்லைங்க ...
அது தான் நமக்கும் நல்லது நாட்டுக்கும் நல்லது ...
இதை பத்தி நீங்க என்ன நினைக்கறீங்க ?? உங்க கருத்துக்களை எதிர் பார்கிறேன்...
0 comments:
கருத்துரையிடுக