வாங்காதீர் லஞ்சம்; யோசிங்க கொஞ்சம்! ராதாசந்த், ஸ்ரீபெரும்புதூரிலிருந்து எழுதுகிறார்:
1.நமக்கு தேவை மிக்சியும், கிரைண்டரும் அல்ல; அதை இயக்க தேவையான மின்சாரத்தை, தடையில்லாமல் கொடுத்தாலே போதும்.
2.வேலையில்லா இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்குவது,
3.கல்வி கட்டணக் கொள்ளை, அந்தந்த மாவட்டம் சார்ந்த தொழில்கள், விவசாயம் போன்றவற்றை மேம்படுத்தும் தொலைநோக்கு திட்டங்களை பற்றி எந்த அறிவிப்பும், இந்த தேர்தல் அறிக்கையில் இல்லை; காரணம் நாம் தான்! நாம் தான், குவாட்டர், கோழி பிரியாணி, மூக்குத்தி, வேட்டி, சேலை, பணத்திற்கும் ஓட்டளிக்க பழகிவிட்டோமே.
4.அதனால், எதை தின்றால் பித்தம் தெளியும், எதை கொடுத்தால் வாக்காளர்கள் மயங்குவர் என்பதை, 40 ஆண்டு கால ஆட்சிக்கட்டிலில் இருக்கும், திராவிட கட்சிகளுக்கு தெரியாதா என்ன?
5.தேர்தலில் நிற்கும் பெரும்பான்மையான வேட்பாளர்கள், கோடீஸ்வரர்கள், அடிதடி, ஆள்கடத்தல், கொலை போன்ற கடுமையான குற்றங்களுக்காக சிறை சென்றவர்கள் என தெரிந்தும், மீண்டும் அவர்களுக்கே ஓட்டளிக்கும் நம் மடத்தனத்தை, என்னவென்று சொல்வது?
6.இனி, சாமான்யன் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெறுவது, எட்டாக்கனி தான். காரணம், ஒவ்வொரு வேட்பாளரும், தான் கோடிகளில் செலவு செய்ய தயார் என்கின்றனரே! மக்கள் சேவை செய்ய, எதற்கு கோடிகளில் செலவு செய்ய வேண்டும்? இந்த கேள்வி நம்மிடையே உதிக்கவே கூடாது என்பதற்காக தான், இத்தனை இலவசங்கள், இத்யாதிகள். இந்த மடமையை கொளுத்த, எந்த பாரதி வரப் போகிறானோ? ஒரு தொகுதியின் மக்கள் தொகை எவ்வளவு, அந்த தொகுதியின் அடிப்படை பிரச்னை என்ன போன்ற விஷயங்களை பற்றியே தெரியாதவரும், அந்த தொகுதிக்கு சம்பந்தமே இல்லாதவரும் வேட்பாளர். நாமும், இலவசங்கள் என்ற போதையில் மயங்கி, ஓட்டளித்துவிட்டு, அந்த போதை தெளிவதற்குள், அடுத்த தேர்தலில் ஓட்டு போட தயாராகிவிடுகிறோம். மக்களே... இலவசங்கள் என்ற பெயரில், வாங்காதீர்கள் லஞ்சம்; ஓட்டளிக்கும் முன், யோசியுங்கள் கொஞ்சம்!
7. பணத்தை பெற்று, இலவச அறிவிப்பை பார்த்து ஓட்டுப் போடுபவர்கள் தமிழர்கள் என்ற ஏளன பேச்சு, நாடு முழுவதும் பரவி இருக்கையில், இந்த முறையும் இலவச அறிவிப்புகள் ஜெயித்தால், தமிழனின் கொஞ்ச நஞ்ச மானமும் நிச்சயம் காற்றில் பறக்கும்.
8.சமீபத்தில் நிருபர்களை சந்தித்த ராமதாஸ், இந்த வருடத்திற்கான, "மெகா ஜோக்' ஒன்றை அவிழ்த்துவிட்டுள்ளார். "ஸ்பெக்ட்ரம் விவகாரம், தமிழகத் தேர்தலில் பாதிப்பை ஏற்படுத்துமா?' என்ற நிருபர்கள் கேள்விக்கு, "அந்த ஸ்பெக்ட்ரம் விவகாரமெல்லாம், தமிழக மக்களை எந்த விதத்திலும் பாதிக்காது; தமிழக மக்கள் ரொம்ப நல்லவங்க!' என, பதில் அளித்துள்ளார். இது நூற்றுக்கு நூறு உண்மை தான். தமிழக மக்கள், எதையும் தாங்கும் தங்கமான மக்கள் தான். அதில், மாற்றுக் கருத்துக்கு இடமில்லை. அன்றொரு நாள், "நானோ, என் மகனோ பதவிக்கு வந்தால், எம்.எல்.ஏ., அல்லது எம்.பி.,யானால், செருப்பால் அடியுங்கள் மக்களே' என ராமதாஸ் சொன்ன பிறகு, மகனை மத்தியில் அமைச்சராக்கியதை, மக்கள் தாங்கிக் கொள்ளவில்லையா? காடுவெட்டி குரு காட்டிய வித்தைகளையெல்லாம் தாங்கவில்லையா? கவலையே பட வேண்டாம் மிஸ்டர் ராமதாஸ்... தமிழக மக்கள் ரொம்ப நல்லவங்க.
9.இலவச திட்டங்களுக்கான வருவாய் வரும் வழியை, தி.மு.க., கூற வேண்டும்' என, நடுநிலையான அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர். "மதுவிலக்கை அமல்படுத்தினால், அதை விட இரட்டிப்பு வருவாய் தரக்கூடிய வழியை நான் கூறுகிறேன்' என, பா.ம.க., ராமதாஸ் கூறி வருகிறார். தற்போது தி.மு.க., கூட்டணியில் உள்ள ராமதாசிடம், தி.மு.க., தலைவர் அந்த வழியைக் கேட்கலாம்10. அரசுப் பள்ளிகளில், முதல் மூன்று இடங்களை பிடிக்கும் அனைத்து மாணவர்களுக்கும், உயர்கல்வி இலவசமாக தரலாம். ஆயிரம் மதிப்பெண்களுக்கு மேல் பெறும் அனைத்து மாணவியருக்கும், இலவச உயர்கல்வி தரலாம். அரசு மருத்துவமனைகள் அனைத்தையும், ஐ.எஸ்.ஓ., தரத்துக்கு உயர்த்தி, உயர் சிகிச்சைக்கு உத்தரவாதம் அளிக்கலாம். வேலையில்லா பட்டதாரி இளைஞர்களுக்கு, தொழிற்பயிற்சி மையம் அமைத்து, பயிற்சி தந்து, 50 சதவீத மானியத்தில் கடன் தொகை தந்து உதவலாம்.
இதை படித்த பிறகாவது இந்த தமிழ் மக்கள் புரிந்து கொள்வார்களா என்று இந்த அரசியல் தேர்வில் தெரிந்து விடும் ,,,, இலவசத்தை விரும்பும் மக்கள்,,,, தன்னை தானே காப்பாற்றிக்கொள்ள தன்னிடமே உன்னால் லஞ்சம் வாங்க முடியுமா? அல்லது இலவசம்தான் கேட்க முடியும்மா? பதில் கூறுங்கள் தமிழ் மக்களே,,, உன் உரிமையை பணத்துக்காக விற்பது உன் மானத்தை விற்பதற்கு சமம்,,! இதை நினைத்து வருந்துங்கள் ,, உன் வாக்கின் மதிப்பு உன் தன்மானத்தை உயர்த்தி காட்டுகின்ற தன்மான சின்னம் அதை ஏன் பணத்திற்காக விற்க வேண்டும். ஒருநாள் பணம்,,, மறுநாள் இருக்காது,, ஆனால் உன் உண்மையான ஒருநாள் ஓட்டு ஐந்து வருடம் உன் பெயர் சொல்லும் மறந்து விடாதே தமிழனே..! இலங்கை ஈழத் தமிழன் என்ன பாவம் செய்தான்,,,! தன் உரிமைக்காக போராடினான் தமிழ் இனமே அழிக்கப்பட்டுவிட்டது,,, இதை மனதில் கொண்டு வாக்களிங்கள்,,, இல்லையெனில் நாளை தமில் ஈழத் தமிழர்கள் என்று கூறி உன்னையும் அழித்துவிடுவார்கள் ,, புரிந்துகொள்,, உன்னை நீ காபற்றிகொள்,,,!
0 comments:
கருத்துரையிடுக