rss
twitter
    Find out what I'm doing, Follow Me :)

மரியாதை தெரியாத நடத்துனர் ...

மரியாதை தெரியாத நடத்துனர் ...

கடந்த வாரம் ஊருக்கு போயிட்டு திரும்பி பெங்களூர் போறதுக்காக ஈரோடு பஸ் ஸ்டேன்ட் வந்தேன்..சேலம் பஸ் சென்று பெங்களூர் போய்டலாம்னு நினச்சு ஒரு தனியார் பஸ் இல் ஏறி உக்கார்ந்தேன்..பஸ் இல் சுமார் 20 பேர் இருந்தனர்..சிறிது நேரம் கழித்து பஸ்சுக்குள் ஏறிய கண்டக்டேர் கொஞ்சம் கூட மரியாதையை என்ன என்று தெரியாத பொறம்போக்கு ..(எல்லோரும் பஸ் இல் ஏறும்போது எங்க போயிருந்தார் என்று தெரியவில்லை) எந்த காரணமும் சொல்லாமல் பஸ்- ஐ விட்டு எல்லோரையும் எறங்கு என்று சொல்லி சத்தம்  போட்டார் ..சிலர் என்ன காரணம் எதற்காக இறங்க சொல்லறீங்க என்று கேட்டனர்..அதற்கும் கொஞ்சம் கூட மரியாதையை இல்லாமல் "காரணம் எல்லாம் சொல்ல முடியாது..வாக்கு வாதம் பண்ணாமல் எல்லோரும் உடனே இறங்குங்கள் என்று சத்தம் போட்டார் .. பஸ் இல் இருந்தா எல்லோரும் கோவத்தோடு கீழே இறங்கினோம்..என்ன செய்ய அந்த நாயோடு  சண்டை போடா முடியாது ..அதுவும் இல்லாமல் அது பஸ் ஸ்டாண்ட் என்பதால் உடனே மற்ற  கண்டெக்டர் எல்லாம் ஒன்ன கூடி  நம்ம கிட்ட சண்டைக்கு வருவாங்க ..அதனால பதில் எதுவும் பேசாமல் கீழே இறங்கினோம்...

கீழே இறங்கிய சிறிது நேரம் kalithu தான் தெரிஞ்சுது அந்த பஸ் எடுக்க இன்னும் 10 நிமிஷம் இருக்கு என்றும்..அதற்கு முன்னால் இன்னொரு பஸ் 5 நிமிடத்தில் எடுக்க வேண்டி உள்ளது என்றும்..ஆனால் அந்த பஸ் இன்னும் பஸ் stand வந்து சேர வில்லை என்பதும் தெரிந்து கொண்டோம்..

சில சமயம் ..இல்லை இல்லை பல  சமயங்களில் நாம் பார்பதுண்டு..அரசு பஸ் ஒன்று கிளம்பும் வரை தனியார் பஸ் இல் பயணிகளை ஏற்றகூடாது என்று டைம் கீபர் தனியார் பஸ் நடத்துனரிடம் சண்டை போட்டு கொண்டு இருப்பதை..இந்த பழக்கம் ஈரோடு,சேலம் , கோவை ஏரியாக்களில் மட்டும் இருக்குது என்று நினைக்கிறன்..வேறு எந்த இடத்திலும் இது போல் பழக்கத்தை பார்த்தது இல்லை..
 எதோ ஒரு ஊரில் தனியார் பஸ் ஒன்று நிறுத்தத்தில் நிக்காமல் போனதுக்காக ..அந்த பஸ்-ஐ பைக்-இல் விரட்டி சென்று ..அந்த பஸ் டிரைவரின் கையை வெட்டினார் என்று,,.ஒருவேளை அப்படி எதாவது நாம ஊரிலும் நடத்த இவனெல்லாம் இப்படி பேசுவனா என்று நினைத்து கொண்டேன்..

அரசு பேருந்துடன் ஒப்பிட்டு பார்க்கும் போது தனியார் பேருந்து நல்லா நிலையிலும் வேகமாகவும் போகும் என்பதால் சில சமயம்..அரசு பேருந்து இருந்தால் கூட காத்திருந்து தனியார் பேருந்தில் ஏறுவோர் உண்டு ..இந்த பழக்கம் தான் அந்த தனியார் பஸ் நடத்துனர் அப்படி மரியாதையை இல்லாமல் நடந்து கொள்ள காரணம் ..எப்படி இருந்தாலும் பயணிகள் அந்த பேருந்தில் தான் ஏறுவாங்க என்ற ஒரு மெத்தனம்...திமிரு..கர்வம்.... உண்மையிலேயே அவர் பேசிய முறை மிகவும் கோவம் மற்றும் வருத்தம் அடைய செய்தது .. என்ன செய்ய நம்முடைய தவறும் இதில் இருக்கிறது..வேலை மட்டும் அரசு வேலை வேண்டும் ஆனால் பயன் படுத்துவது எல்லாம் தனியார் பேருந்து , தனியார் மருத்துவமனை என்று..

ஒரு வேலை அரசு பஸ் , அரசு மருத்துவ மனை எல்லாம் ஒழுங்கா இருந்தா நாம ஏன் தனியார் நிறுவனத்தை விரும்ப போகிறோம்???..எதாவது பிரச்னை என்று வந்தால் மட்டும் தான் அரசு பஸ் , அரசு உடமைகள் நம்ம நியாபகத்துக்கு வரும்..உடனே அதை உடைக்கவோ இல்ல எரிக்கவோ செய்வோம் இல்லையா??  இதே போல் மரியாதையை இல்லாமல் ஒரு அரசு  பஸ் நடத்துனர் சொல்லி இருந்தால் அவர ரவுண்டு கட்டி ஏறி இருப்பாங்க..இளிச்ச வாயன் அரசு பஸ் நடத்துனர் தான...இதை எங்க யார் கிட்ட போய் முறை இடராதுன்னு தெரியல எனக்கு..யாரை குற்றம் சொல்ல ...ம் நாம தான் திருந்திகனும் யாரையும் திருத்த முடியாது ....கலிகாலம்...