rss
twitter
    Find out what I'm doing, Follow Me :)

புரமோஷன் வாங்க ஏழு ஐடியாக்கள்

Easy 7 Ways to Get Promotion


1. மேசையை எப்போதும் களேபரமாக வைத்திருங்கள். ஐந்தாறு பைல்கள் திறந்து கிடக்க வேண்டும். நடுவில் பேனாவைத் திறந்து போட்டிருக்க வேண்டும். மேசையின் இழுப்பறைகள் பாதி திறந்திருக்க வேண்டும். சாவி தொங்கிக் கொண்டிருக்க வேண்டும்.

1. Always keep some open files/document/pen/drawer on tables.


2. போனில் உரக்க பேசுங்கள். 'ஐ சிம்ப்ளி கேன்னாட் டாலரேட் தட்',டுமாரோ வில் பீ டூ லேட்', என்கிற மாதிரி வாக்கியங்களை அழுத்தம் திருத்தமாக உச்சரியுங்கள். ஆங்காங்கே கொஞ்சம் ஹிந்தி, மலையாளம் கலந்து பேசுவது குணச்சித்திரத்தை மேம்படுத்தும். எதிராளியைக் காய்ச்சி வடிகட்டுற மாதிரி பேசுங்கள். இதைச் செய்கிற போது எதிர் முனையில் போன் வைக்கப் பட்டுவிட்டது என்பதை நிச்சயித்துக் கொண்டு செய்வது உடம்புக்கு நல்லது.

2. Speak loudly like that, "I simply cannot tolerate that", "Tomorrow will be too late". Use some Hindi, Malayalam words for increased coverage. While speaking in phone speak loudly and give left and right, but do it after opposite party put-off his phone. 


3. அலுவலகத்துக்குள் எப்போது நடந்தாலும் ஏதோ தீ விபத்து நடந்து விட்டது மாதிரி வேகமாக நடங்கள். நீங்கள் போவது காண்டீனுக்கு மசால் வடை சாப்பிடவோ கூட இருக்கலாம்.

3. Always walk very fast in office better sometimes running with some bloody words. Even if you go for Tea/Toilet.


4. மேற்சொன்ன தீ விபத்து நடைகளின் போது கையில் எப்போதும் ஒரு பைலோ, ரிஜிச்தரோ வைத்திருங்கள். அது காலி பைலாகவோ, அந்த ரிஜிஸ்தர் உங்கள் மகனின் மேப் டிராயிங் நோட்டாகவோ கூட இருக்கலாம்.

4. Always while fast walking keep some files with you. Even that may be empty file/your son's school notebook.


5. சாயந்திரம் ஐந்தரைக்குப் பிறகு உங்கள் பாசின் கேபினுக்கு முன்னால் குறுக்கும் நெடுக்கும் சும்மாவாவது நடங்கள்.

5. Evening after 5' o clock just walk in-between your boss cabin, Notice whether he identified you.


6. ஒரு வேளை அவர் ஏற்கனவே கிளம்பியிருந்தால் அவர் நம்பருக்கு போன் செய்து உப்புப் பெறாத விஷயம் எதற்காவது ஐடியா கேளுங்கள். 'ஆர் யு ஸ்டில் இன் தி ஆபிஸ்?' என்று கேட்க வையுங்கள். அதற்கு பதிலாக, 'யுஷுவலா கிளம்பற நேரமே இன்னம் வரல்லை சார்' என்கிற ரீதியில் பதில் சொல்லுங்கள்.

முடிந்தால், 'கேசவன் வேறே இன்னைக்கு வரல்லையா, நாளைக்கு ஆடிட் இருக்கேஎன்கிற மாதிரி யாரையாவது டிப்ளமேடிக்காக போட்டுக் கொடுங்கள்.

6. If your boss left home no probs, Call him from office (from office phone only) after office hour even some chilly discussion/ideas. If he says "Are you still in the office?" say to him "Actually my usual closing hour still not came sir." Some time tell about others as "That guy not yet came sir, tomorrow we have audit/important client meeting..," for creating bad image of particular guy and gain your relation with manager.


7. அடுத்த நாள் பாசுடன் பேசும் போது சம்பந்தமே இல்லாமல் 'நேத்து கூட சாயந்திரம் ஆறரை மணி இருக்கும், வெப் இந்தியா ஆளுங்க போன் பண்ணாங்க' என்கிற மாதிரி அப்டேஷன்கள் கொடுங்கள். ஆறரை, ஏழு என்கிற இடங்களில் இழுத்து இழுத்து பேசுங்கள்.

7. Next day while talking with boss "Yesterday evening 6-7 o' clock that client called and told like this and I convinced them…" like this. Particularly stress the time as until your boss say something.