rss
twitter
    Find out what I'm doing, Follow Me :)

மொட்டை


குழந்தை பிறந்து 30 அல்லது 45 நாட்களில் மொட்டை போடுவது வழக்கம். இது யாவரும் கண்ட உண்மை. 

ஆனால் ஏன் அப்படி மொட்டை போடுவது என்பது யாருக்காவது உண்மையான விளக்கம் தெரியுமா? அது சும்மா நேர்த்திக்கடனுக்காக என்று நினைத்துக்கொண்டிருப்பவர்கள் தங்களது எண்ணத்தை மாற்றிக்கொள்ளுங்கள்.

அதையும் தாண்டி ஒரு அறிவியல் ரீதியான விளக்கம் இருக்கிறது இதற்கு. அதாவது நாம் அனைவரும் 10 மாதங்கள் தாயின் வயிற்றில் கருவறையில் இருக்கிறோம். அந்த பத்து மாதமும் வயிற்றுக்குள் எம்மை சுற்றி என்ன தேனும் பாலுமா இருக்க போகிறது? 

இல்லை இரத்தம் சதை மலம் சிறுநீர் என அனைத்தும் இருக்கும்.அதற்குள்ளேதான் நாம் பத்து மாதங்கள் இருக்கிறோம். இவையெல்லாம் எமது உடம்பில் எவளவு ஊறியிருக்கும்.

வெறும் ஐந்து நிமிடம் கடல்நீரில் விரலை வைத்து துடைத்து விட்டு சுவைத்து பாருங்கள் எமது விரல் அப்போதும் உப்பாகத்தான் இருக்கும். 5நிமிடம் உப்பு நீரில் வைத்த விரலே இப்படியென்றால் பத்து மாதம் மலம் சிறுநீர் இரத்தம் சதை இவற்றுக்குள் கிடந்த எமது உடலில் அவை எவ்வளவு ஊறியிருக்கும். 

இதெல்லாம் எப்படி வெளியேறும்?? எமது உடலில் உள்ள கழிவுகள் எல்லாம் மயிர்கால்கள் வழியாக வெளியேறும். தலையில் உள்ள கழிவுகள் வெளியேற வழிகள் குறைவு. இதனால் சிரசில் அந்தக் கழிவுகள் தேங்கி நிற்கும் சந்தர்பங்கள் ஏற்படுகிறது. இதனால் பிற்காலத்தில் பாரிய நோய்கள் ஏற்பட வாய்ப்புக்கள் உண்டு. 

எனவேதான் சிரசில் மொட்டை போடுவது நேர்த்திக்கடன் என்ற பெயரில் முன்னோர்களால் பரப்பப்பட்டது. இதைப்போல் மீண்டும் ஒரு தடவை குழந்தைகளுக்கு மொட்டை போடுவார்கள். 

அது ஏற்கனவே மொட்டை போடும் போது ஏதாவது கிருமிகள் தவறியிருப்பின் இரண்டாவது மொட்டையில் இல்லாமல் போய்விடும் என்பதற்காகவே. 

தற்போது புரிகிறதா பிறந்த குழந்தைக்கு கோயிலில் மொட்டை போடுவது ஏன் என்பது. இது தொடர்பாக அறிவியல் ரீதியாக கூறினால் மக்கள் பின்பற்றமாட்டார்கள் என்பதற்காகத்தான் ஆன்மீகரீதியாக கூறி மக்களை பின்பற்ற வைத்துள்ளனர் முன்னோர்கள். 

ஆனால் அதற்கு ஆன்மிக ரீதியிலான வேறு ஒரு விளக்கத்தினையும் குறிப்பிட்டுள்ளனர். எது எப்படியே ஆன்மிகத்தில் கூறப்பட்ட பல்வேறு காரியங்களுக்கு அறிவியல் ரீதியிலான விளக்கங்கள் இருக்கின்றது என்பதே உண்மை.