skip to main |
skip to sidebar
இந்தியாவில் கார் விற்பனையில் மாருதி சுசூகி நிறுவனம் முதலிடத்தில் இருந்தாலும், விலை அதிகமான சொகுசு கார் விற்பனையில் பின் தங்கிய நிலையில் தான் இருந்து வந்தது. இந்த பிரிவில் மாருதி நிறுவனத்தின் எஸ்எக்ஸ் 4 கார் மட்டுமே விற்பனையில் உள்ளது. இந்த சூழ்நிலையில்,'கிஷாஷி' என்ற புதிய காரை, மாருதி சுசூகி நிறுவனம் சமீபத்தில் அறிமுகப்படுத்தியது. இந்த காரில் 2.4 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. மேனுவல் மற்றும் ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் என இரண்டு மாடல்களில் இந்த கார் கிடைக்கும். இதில் 6 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் வசதி கொண்ட காரின் விலை ரூ.16.5 லட்சம்(எக்ஸ்ஷோரூம் டில்லி). 6 ஸ்பீடு ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வசதி கொண்ட காரின் விலை ரூ.17.5 லட்சம். இந்த காருக்கான முன்பதிவு ஏற்கனவே துவங்கி விட்டது. மார்ச் மாதம் முதல் டெலிவரி துவங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கார், வெளிநாட்டில் உற்பத்தி செய்யப்பட்டு, இந்தியாவுக்கு முழுமையாக இறக்குமதி செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த கார், ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு 12.45 கி.மீ., மைலேஜ் தரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
0 comments:
கருத்துரையிடுக