rss
twitter
    Find out what I'm doing, Follow Me :)

மாயாவதியின் ஷூவை கிளீன் செய்த போலீஸ் :ஜனாதிபதி விருதுபெற்ற டி.எஸ்.பி.,இப்படியா?

லக்னோ: உத்திரபிரதேச மாநில முதல்வர் மாயாவதியின் ஷூவை பாதுகாப்புக்கு வந்த போலீஸ் அதிகாரி ஒருவர் தனது கர்ச்சீப்பால் குனிந்து சுத்தம் செய்த சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. மாயாவதி என்றாலே ஏதாவது ஒரு விஷயத்தில் பேசப்படும் ஆளாக இருந்து வருகிறார்.

மநிலம் முழுவதும் தனது உருவ சிலைகள், கோடிக்கணக்கில் ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை கோர்த்து பணமாலையாக தொண்டர்கள் அணிவித்தனர், பின்னர் ஆடம்பரத்தின் வெளிப்பாடாக அவரது கட்சி மூத்த தலைவர்களின் பெயரில் பூங்காக்ககள் என அமைத்து சுப்ரீம் கோர்ட் கண்டனத்தை வாங்கி கொண்டார்.

இந்நிலையில் அவுரியா பகுதியில் நடக்கும் ஒரு நிகழ்ச்சிக்கு சென்ற மாயாவாதி சிறப்பு ஹெலிகாப்டர் மூலம் வந்து இறங்கினார். கிளம்பிய புகை காரணமாக அவரது கால் ஷூ முழுவதும் தூசு படிந்தது. இவருடன் வந்த பெர்சனல் செக்ரியூட்டி ஆபீசர் (பி.எஸ்.ஓ.,) மாயாவதியை நோக்கி ஓடினார். பின்னர் அவர் தனது பேண்ட் பாக்கெட்டில் இருந்த கர்ச்சீப்பை எடுத்து காலடியில் குனிந்து சுத்தம் செய்தார். அவர் கிளீன் செய்தது கண்டுகொள்ளவில்லை. அவர் சகவாசமாக அதிகாரிகளுடன் பேசிக்கொண்டிருந்தார்.


இதனையடுத்து அவர் கிளம்பி சென்றார். ஒரு பாதுகாப்புக்கு வந்த போலீஸ் இப்படி அடிமைத்தனமாக நடத்திக்காட்டியது பெரும் கண்டனத்திற்குள்ளாகியிருக்கிறது. எதிர்கட்சியான சமாஜ்வாடி கட்சியினர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இக்கட்சியின் தலைவரும் முன்னாள் முதல்வருமான முலாயம்சிங் கூறுகையில் இது இந்த மாநிலத்தில் சட்டம் ஒழுங்‌கு கெட்டு விட்டதையே காட்டுகிற‌து என கூறியுள்ளார்.