rss
twitter
    Find out what I'm doing, Follow Me :)

புதிய போர் விமானங்கள் வாங்க இந்தியா ஒப்பந்தம்

புதுடில்லி : அமெரிக்காவிடம், புதிய போர் விமானங்களை வாங்குவது தொடர்பாக இந்தியா ஒப்பந்தம் செய்துள்ளது.

ஆசியாவில் மூன்றாவது மிகப்பெரிய பொருளாதார வல்லரசாக திகழும் இந்தியா, அடுத்த ஐந்து ஆண்டுகளில், நாட்டின் பாதுகாப்புக்காகவும், படைகளை நவீனப்படுத்துவதற்காகவும், ஒரு லட்சத்து 38 ஆயிரம் கோடி ரூபாயை செலவிட திட்டமிட்டுள்ளது.அமெரிக்காவின் "நார்த்ரோப் குருமான்' என்ற ஆயுத தயாரிப்பு நிறுவனத்திடம், புதிதாக 126 போர் விமானங்களை வாங்க முடிவு செய்துள்ளது. இதற்கான ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இந்த விமானங்களை வாங்குவதற்காக, இந்தியா 50 ஆயிரத்து 600 கோடி ரூபாயை ஒதுக்கியுள்ளது. இதுதவிர, விமான கட்டுமான தொழில்நுட்பங்கள், ரேடார்களும் வாங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அமெரிக்காவின் "நார்த்ரோப் குருமான் நிறுவனத்திடமிருந்து தான், அமெரிக்காவின் ராணுவ தலைமையகமான "பென்டகனும்' பெருமளவு ஆயுதங்களை கொள்முதல் செய்கிறது.இதேபோன்று, இந்திய கடற்படையை வலுப்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. கடற்படைக்கு புதிதாக 12 கப்பல்கள் மற்றும் போர் விமானங்களை வாங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், எச்சரிக்கைக் கருவிகள், ஆளில்லா விமானங்களை வாங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக கடற்படை அதிகாரிகள் கூறியுள்ளனர்.