rss
twitter
    Find out what I'm doing, Follow Me :)

கும்மி..



 கும்மி...



லேடிஸ் பர்ஸ்ட்.
காதலி : ஏங்க.. எவ்வளவு நேரமா பீச்-லே உங்களுக்காக காத்துக் கிட்டிருக்கிறது? 


காதலன் : மன்னிச்சுக்க டார்லிங், நான் எப்பவும் பெண்களுக்கு மரியாதை குடுக்கறவன். அது உனக்கே தெரியும். லேடிஸ் பர்ஸ்ட். இதுதான் என் கொள்கை. நீ முன்னாடி வர்றதுக்கு நான்தான் காரணமாக இருந்திருக்கேன்* 

காதலி: பேச்சுல மட்டும் குறைச்சலில்லை..* 

காதலன் : நீ இப்படி கோபப்பட்டா கூட அதுவும் அழகாத்தான் இருக்கு* 

காதலி: கோபத்துல என்ன அழகு இருக்கு? 

காதலன் : கண்ணு படபடன்னு துடிக்குது பாரு. அதுவே ஓர்அழகுதான். 

சரி.. இந்தா சுண்டல்* 

காதலி: நீங்க சாப்பிடுங்க* 

காதலன் : நீதான் முதல்லே* லேடீஸ் பர்ஸ்ட்.* 

கண் சிமிட்டறதை வச்சே ஒருத்தருடைய உடல், மனநிலையையும் கண்டு பிடிக்கலாமாம். 

காதலி: அப்படியா? 

காதலன் : ஆமாம்* நரம்பியல் விஞ்ஞானிகள் சொல்றாங்க. கண் சிமிட்டறது குறைச்சலா இருந்தா மனது சந்தோஷமாக இருக்குன்னும், அதிகமாக இருந்தா உடம்பு, மனசுல வலி இருக்குன்னு அர்த்தம். அமெரிக்க ஜனாதிபதி புஷ் தேர்தல் பிரச்சார கூட்டத்துல பேசறப்போ எப்படியெல்லாம் அவர் கண்ணு துடிச்சதுங்கறதை ஒருத்தர் ஆய்வு பண்ணியிருக்கார். 

காதலி: பரவாயில்லையே* 

காதலன் : கண் சிமிட்டலை வச்சே நோயாளியின் வலியை புரிஞ்சக்கலாம். மூளைக் கோளாறுகளை கண்டுபிடிக்கலாம்.மனசுல என்ன விதமான கவலைங்கறதைக்கூட கண்டுபிடிக்கலாமாம். 

காதலி: சரி, அதெல்லாம் இப்ப எதுக்கு? 


காதலன் : காதலர்கள் அர்த்தமில்லாமே எதையாவது பேசிக்கிட்டிருப்பாங்கன்னு சொல்றது வழக்கம். நாம கொஞ்சம் அர்த்தத்தோடு பேசுலாம்னு பார்த்தேன். 

காதலி: நானும் அர்த்தத்தோடு ஒரு கேள்வி கேட்கிறேன். நம்ம கல்யாணம் எப்போ? 

காதலன் : இது என்ன கேள்வி. என்னோட கொள்கைதான் உனக்கு நல்லா தெரியுமே.. லேடிஸ்பர்ஸ்ட். முதல்லே உனக்கு *அதுக்கப்புறம் எனக்கு*

                             
                                                  ******************************** 

ஓர் ஊருக்கு புதிய மனிதன் ஒருவன் வந்தான்.

''எங்கே இருந்து வருகிறாய்?'' என்று கேட்டார்கள்.

''தேவலோகத்திலிருந்து வருகிறேன்'' என்றான்.

கேட்டவர்கள் சிரித்தார்கள்.

''உன்னை யார் இங்கே அனுப்பி வைத்தது?''

''கடவுள்தான் அனுப்பி வைத்தார்.''

கேட்டவர்களுக்கு மேலும் சிரிப்பு.

புத்தி சரியில்லாதவன் என்பதாகப் புரிந்து கொண்டு அவனை கோயிலுக்குக் கூட்டிச் சென்றார்கள். மனநலம் பாதிக்கப்பட்டவர்களைத் தெளிய வைக்கிற கோயில் அது. அங்கே இருந்த கல் மண்டபத் தூணில் இவனைக் கட்டிப் போட்டு விட்டார்கள்.
இப்போது அவன் சிரித்தான்.

''ஏன் சிரிக்கிறாய்?''
''என்னை அனுப்பி வைக்கிறபோது கடவுளே சொன்னார், இப்படி எல்லாம் நடக்கும் என்று!''

''எப்படி எல்லாம் நடக்கும் என்று?''

''உன்னைக் கட்டிப் போடுவார்கள்... கைகொட்டிச் சிரிப்பார்கள் என்று சொன்னார் கடவுள். அவர் சொன்னபடியே நடக்கிறது. ஆகவே, நான் அவருடைய தூதன் என்பதற்கு இதைவிட வேறு என்ன நிரூபணம் வேண்டும்?''

மக்கள் யோசித்தார்கள்.

''சரி. நீ என்னதான் சொல்ல வருகிறாய்?''

''நம்புங்கள்... நான் ஒரு தீர்க்கதரிசி. கடவுளால் இங்கே அனுப்பப் பட்டவன். உங்களுக்கு வழிகாட்டவே இங்கே வந்திருக்கிறேன்.''

இப்போது இன்னொரு சிரிப்புச் சத்தம். இவனைவிட பலமாகச் சிரிப்பது கேட்டது. அந்தச் சத்தம் எங்கே இருந்து வருகிறது? அவனுக்குப் பின்னால், அதே மண்டபத்தில்! அங்கே இன்னொரு மனிதன் தூணில் கட்டப்பட்டிருக்கிறான்.

''நீ ஏன் சிரிக்கிறாய்?''

''நீ பொய் சொல்கிறாய்... அதனால் சிரிக்கிறேன்!''

''எது பொய் என்கிறாய்?''

''கடவுள் உன்னை அனுப்பி வைத்ததாகச் சொல்வது பொய்!''

''அது எப்படி உனக்குத் தெரியும்?''

''நான் உன்னை அனுப்பி வைக்கவே இல்லையே!''

இவன் அதிர்ச்சியோடு அவனை நிமிர்ந்து பார்த்தான்.

அவன் சொன்னான் பரிதாபமாக... ''நான்தான் கடவுள் என்று சொல்லிக் கொண்டு இங்கே வந்தவன். ஒரு மாதமாகக் கட்டிப் போட்டு வைத்திருக்கிறார்கள்.''

நண்பர்களே!
நானே கடவுளின் தூதன் என்கிறார்கள் சிலர்.
நானே கடவுள் என்கிறார்கள் சிலர்.
உண்மையான கடவுள் எங்கேதான் இருக்கிறார்? 



                                                   *****************************
ஏதாவது கல்யாணத்துக்கு போனா என் பாட்டிங்க, அத்தைங் யெல்லாம் கிண்டல் பண்ணுவாங்க "அடுத்து உனக்குதான்" அப்படின்னு. பயங்கரமா கேலி பண்ணுவாங்க. ஆனால் ஒரு நாள் அப்படி செய்யறது நிறுத்திட்டாங்க. ஏன்னா நானும் அதையே அவங்ககிட்ட திருப்பி சொன்னேன் ஒரு சாவு வீட்ல.


                                                     *******************************


டெலிஃபோன் பில் அந்த மாசம் அதிகமாயிடுச்சுன்னு குடும்பத் தலைவர் மீட்டீங் போட்டார் ஒருநாள்....

அப்பா: இதை ஏத்துக்கவே முடியாது, நீங்க எல்லோரும் ஃபோனை அளவா பயன்படுத்தனும். நான் வீட்டில போனை யூஸ் பண்ணுறதே இல்லை. எல்லாம் ஆபீஸ் போன் மட்டும்தான்.

அம்மா: நானும் அப்படித்தான். நம்ம வீட்டு ஃபோனை அவ்வளவா யூஸ் பண்ணுறதே இல்லை. வேலைக்கான ஃபோனைதான் பயன்படுத்துவேன்.

பையன்: நானும்தான் நான் வீட்டு ஃபோனை யூஸ் பண்ணுறதே இல்லை. கம்பெனியில் கொடுத்த மொபைல் மட்டும்தான் எப்பவுமே யூஸ் பண்ணுவேன்.

வேலைக்காரி: அப்புறம் என்ன பிரச்சினை? நாம எல்லோருமே அவங்கவங்க வேலையில் இருக்கிற போனைத்தானே பயன்படுத்தறோம்!!!!.


                                                ***********************************

நன்றி : ஜோக்ஸ் கும்மி குருப்