rss
twitter
    Find out what I'm doing, Follow Me :)

நீதிக் கதைகள்

ஒருவன் தன் கழுதை மேல் சுமை ஏற்றிக் கொண்டிருக்கும் போது எதிரிகள் வருவதைப் பார்த்தான், பயந்துபோய், "கழுதையே வா!  நாமிருவரும் ஒடிப்போய்விடலாம். எதிரிகள் வருகிறார்" என்றான்.

கழுதை, "நான் வரவில்லை. நீ ஓடு!" என்றது.

"ஏன் கழுதாய்?"

"எதிரிகளுக்கும் பொதி சுமக்கத்தானே போகிறேன். உன்னுடன் வந்தால் எனக்கு சுமை குறையப்போகிறாதா?" என்றது.


நீதி: அரசு மாறும்போது, ஏழை மக்களுக்கு நிகழும் ஒரே மாற்றம் எஜமானர்களின் பெயர் மட்டுமே!


புதிய நீதிக் கதைகள் புத்தகத்தில் சுஜாதா