rss
twitter
    Find out what I'm doing, Follow Me :)

கணவன் & மனைவி

 னைவி: ஏங்க.. சமையல்காரியை நிறுத்திட்டு இனி நானே சமைக்கிறேன்…எனக்கு மாச எவ்வளவு சம்பளம் கொடுப்பீங்க?

ணவன்: உனக்கு எதுக்குடா சம்பளம்… நீ சமைக்க ஆரம்பிச்சுட்டேனா என் இன்சுரன்ஸ் பணம் மொத்தமும் உனக்குத்தானே…!

***

மனைவி: ஏங்க என்கிட்ட உங்களுக்கு பிடிச்சது என் சிரிப்பா,கூந்தலா, என் கண்களா?? எதுங்க?

கணவன்: இப்படி சிரிக்காமலேயே சூப்பரா காமெடி பண்ணுறியே அதான் புடிச்சுருக்கு

***

மனைவி: நம்ம பையன் வளர்ந்து என்னவாக ஆசைப்படுறீங்க?

கணவன்: அவன் என்ன வேணும்னாலும் ஆகட்டும்…ஆனா யாருக்கும் புருஷனா மட்டும் ஆகக்கூடாது…நான் பட்ட கஷ்டம் என்னோட போகட்டும்!

***

மனைவி: என்னங்க… அதோ குடிச்சிட்டு தள்ளாடிக்கிட்டே போறாரே அவரு என்னை பொண்ணு பார்க்க வந்தாரு, நான் அவரை கல்யாணம் பண்ணமாட்டேன்னு சொல்லிட்டேன். அதை நினைச்சே அவரு இத்தனை வருஷமா தண்ணியடிக்கிறாரு!

கணவன்: அவன் கொடுத்து வச்சவன்… அந்த சந்தோஷத்தை இத்தனை வருஷமா கொண்டாடிட்டிருக்கானேன்னுதான் ஆச்சர்யமா இருக்கு!

***

மனைவி: என்னங்க நான் செத்துப்போயிட்டா… என்ன பண்ணுவீங்க?

கணவன்: எனக்கு பைத்தியமே புடிச்சுரும்.

மனைவி: நான் செத்தா இன்னொரு கல்யாணம் பண்ணுவீங்களா?

கணவன்: பைத்தியம் என்ன வேணும்னாலும் பண்ணும்.

***

டாக்டர் : உங்க கணவருக்கு இப்ப ஓய்வு ரொம்ப முக்கியம்… இந்தாங்க தூக்க மாத்திரை

மனைவி: இதை எத்தனை தடவை கொடுக்கனும் அவருக்கு?

டாக்டர்: இது அவருக்கு இல்லை…உங்களுக்கு!!

***

(புயல் மழையில் ஒருவன் பிஸ்ஸா வாங்க கடைக்கு செல்கிறான்)

கடைக்காரர் : சார் உங்களுக்கு கல்யாணம் ஆயிடுச்சா…?

வந்தவர்: பின்ன இந்த புயல் மழைல எங்க அம்மாவா என்னை பிஸ்ஸா வாங்க அனுப்புவாங்க…!??

***

கடவுள்: மனிதா உனக்கு என்ன வரம் வேண்டும் கேள்?

மனிதன்: இந்தியாவுலேர்ந்து அமெரிக்காவிற்கு ரோடு போட்டு கொடுங்க சாமி!!

கடவுள்: அது கஷ்டமாச்சே…வேறு ஏதாவது கேள்.

மனிதன்: அப்ப என் மனைவி பேச்சை குறைக்கணும், நான் சொல்றதை கேட்கனும், எதையும் வாங்கித் தரச்சொல்லிக் கேட்ககூடாது…

கடவுள்: சரி சரி… அமெரிக்காவுக்கு ரோடு சிங்கிளா, டபுளா…?!!

***