rss
twitter
    Find out what I'm doing, Follow Me :)

திரைப் படமா??? இல்லை பாடமா??


சினிமாவை  பார்த்து மக்கள் கேட்டு போறாங்க அப்படினு மட்டும் தான் நாம கேள்வி படுறோம் இல்லையா..என்னைக்காவது ஒரு   சினிமாவை  பார்த்து மக்கள் திருந்திட்டங்கன்னு சொல்லி கேள்வி பட்டு இருக்கோமா??? இருக்கவே இருக்காது ...

நார்மலா நாம ஒரு   படம் பார்த்தா ஒரு நாள் இல்லை ரெண்டு நாள் அந்த படத்தோட தாக்கம் இருப்பது உண்மை   தான்..அதுவும் நல்லா படமாவோ இல்லை எதாவது ஒரு புது கதையோடு இருக்கற சினிமாவா இருந்தால் மட்டும்..  என்ன   இப்ப   எல்லாம்   ஒன்னு   மதுரை  பேஸ்   பண்ணி   வருது.   (கேட்டா  செண்டிமென்ட்னு   சொல்வாங்க..  இதனால இப்ப எல்லாம்   மதுரைன்னு பேர   கேட்டாலே   வெறுப்பா இருக்கு) .இல்லை   பாலின  வன்முறைய பேஸ் பண்ணி வருது..()   இந்த    ரெண்டும்   இல்லேன   இருக்கவே  இருக்கு  லவ்  ஸ்டோரி ...அதிலும் கூட காதலன் அல்லது    காதலி    கிளைமாக்சில்   சாகறமாதிரி வருது   ( பருத்தி வீரன் படத்தோட தாக்கம் இன்னும் போகல ).  .இந்த   மூணு   கதைய விட்டா   வேற என்ன  வருது   இப்ப   வர்ற படத்துல.. .

இதையும்   மீறி   ஒரு   சில   நல்லா கதைகள்   அப்போ   அப்போ   வருதுங்க   நான்  இலேன்னு சொல்லல ..

இப்படி  இருக்கும்  போது   நான்   நிறைய  பேர   பார்த்துட்டேன்   ஒரு படம்  பார்த்துட்டு   அந்த படம்  எடுத்த டைரக்டர்  கூட   யோசிச்சிருக்க   மாட்டார்   அந்த    அளவுக்கு   ஒவ்வொரு   சீனுக்கும்   ஒரு   அர்த்தம்   சொல்லி சண்டை   வேற   போடுவாங்க  பாருங்க. .காமெடியா  இருக்கும்.. குறிப்பா   கமல்   படம்   வந்தால்   போதும் "படத்தில்   ஒரு   குறிப்பிட்ட   சமுதாயத்தை   கேவல   படுத்தறார் ..  இன்னொரு   சமுதாயத்தை   உயர்வா சொல்றார்.."   அப்படின்னு   எல்லாம்   சொல்வாங்க.  .

ஏங்க   ஒரு  படத்த   படமா   பார்த்தா   ஏன்   இந்த  பிரச்சினை எல்லாம்   வருது.. அத   நாம   ஏன்   பாடமா   பார்க்கனும்..???.. எல்லாம்   நம்மோட   பார்வைல  தான் இருக்கு..முடிஞ்சவரைக்கும் சினிமாவ  ஒரு  பொழுது  போக்கு  ஊடகமா  வச்சிருக்கற  வரைக்கும்  தொல்லை இல்லைங்க ...

அது  தான் நமக்கும்  நல்லது  நாட்டுக்கும்  நல்லது ...

இதை பத்தி நீங்க என்ன நினைக்கறீங்க ?? உங்க கருத்துக்களை  எதிர் பார்கிறேன்...

கணவன் & மனைவி

 னைவி: ஏங்க.. சமையல்காரியை நிறுத்திட்டு இனி நானே சமைக்கிறேன்…எனக்கு மாச எவ்வளவு சம்பளம் கொடுப்பீங்க?

ணவன்: உனக்கு எதுக்குடா சம்பளம்… நீ சமைக்க ஆரம்பிச்சுட்டேனா என் இன்சுரன்ஸ் பணம் மொத்தமும் உனக்குத்தானே…!

***

மனைவி: ஏங்க என்கிட்ட உங்களுக்கு பிடிச்சது என் சிரிப்பா,கூந்தலா, என் கண்களா?? எதுங்க?

கணவன்: இப்படி சிரிக்காமலேயே சூப்பரா காமெடி பண்ணுறியே அதான் புடிச்சுருக்கு

***

மனைவி: நம்ம பையன் வளர்ந்து என்னவாக ஆசைப்படுறீங்க?

கணவன்: அவன் என்ன வேணும்னாலும் ஆகட்டும்…ஆனா யாருக்கும் புருஷனா மட்டும் ஆகக்கூடாது…நான் பட்ட கஷ்டம் என்னோட போகட்டும்!

***

மனைவி: என்னங்க… அதோ குடிச்சிட்டு தள்ளாடிக்கிட்டே போறாரே அவரு என்னை பொண்ணு பார்க்க வந்தாரு, நான் அவரை கல்யாணம் பண்ணமாட்டேன்னு சொல்லிட்டேன். அதை நினைச்சே அவரு இத்தனை வருஷமா தண்ணியடிக்கிறாரு!

கணவன்: அவன் கொடுத்து வச்சவன்… அந்த சந்தோஷத்தை இத்தனை வருஷமா கொண்டாடிட்டிருக்கானேன்னுதான் ஆச்சர்யமா இருக்கு!

***

மனைவி: என்னங்க நான் செத்துப்போயிட்டா… என்ன பண்ணுவீங்க?

கணவன்: எனக்கு பைத்தியமே புடிச்சுரும்.

மனைவி: நான் செத்தா இன்னொரு கல்யாணம் பண்ணுவீங்களா?

கணவன்: பைத்தியம் என்ன வேணும்னாலும் பண்ணும்.

***

டாக்டர் : உங்க கணவருக்கு இப்ப ஓய்வு ரொம்ப முக்கியம்… இந்தாங்க தூக்க மாத்திரை

மனைவி: இதை எத்தனை தடவை கொடுக்கனும் அவருக்கு?

டாக்டர்: இது அவருக்கு இல்லை…உங்களுக்கு!!

***

(புயல் மழையில் ஒருவன் பிஸ்ஸா வாங்க கடைக்கு செல்கிறான்)

கடைக்காரர் : சார் உங்களுக்கு கல்யாணம் ஆயிடுச்சா…?

வந்தவர்: பின்ன இந்த புயல் மழைல எங்க அம்மாவா என்னை பிஸ்ஸா வாங்க அனுப்புவாங்க…!??

***

கடவுள்: மனிதா உனக்கு என்ன வரம் வேண்டும் கேள்?

மனிதன்: இந்தியாவுலேர்ந்து அமெரிக்காவிற்கு ரோடு போட்டு கொடுங்க சாமி!!

கடவுள்: அது கஷ்டமாச்சே…வேறு ஏதாவது கேள்.

மனிதன்: அப்ப என் மனைவி பேச்சை குறைக்கணும், நான் சொல்றதை கேட்கனும், எதையும் வாங்கித் தரச்சொல்லிக் கேட்ககூடாது…

கடவுள்: சரி சரி… அமெரிக்காவுக்கு ரோடு சிங்கிளா, டபுளா…?!!

***