rss
twitter
    Find out what I'm doing, Follow Me :)

உறுப்பு தானம்


உடல் உறுப்பு தனம் பற்றி தெரிந்து கொள்வோம் நண்பர்களே..

உதிரக்கொடை (இரத்த தானம் ) :
  • ஒருவர் உடம்பில் ஓடும் சுமார் 5 லிட்டர் (5000 மில்லி லிட்டர்) இரத்ததில் இருந்து சுமார் 350 மிலி பெறப்படுவது இரத்த தானம்
  • எத்தனை முறை வேண்டுமானாலும் அளிக்கலாம்
  • சில நாட்களில் இரத்தம் மீண்டும் ஊறி விடும்
  • தானம் பெற்றவருக்கும் தானம் அளித்தவரின் இரத்தமும் ஒரே வகையாக இருக்க வேண்டும் என்பது அவசியம்
  • பலன் : பிணியாளருக்கு. ஒவ்வொரு முறையும் ஒரு உயிரை காக்கலாம்

கண் கொடை (கண் தானம்) :

  • ஒருவர் இறந்த பின் அவரது கண்கள் எடுக்கப்படும்.
  • இயற்கை மரணம் என்றாலும் எடுக்கப்படும்
  • மூளை சாவு என்றாலும் எடுக்கப்படும்
  • கண்கள் எடுக்கப்பட்ட பின் பிரேத உடல் உறவினர்களிடம் அளிக்கப்படும்
  • எடுக்கப்பட்ட கண்களின் விழித்திரை அடுத்த நபருக்கு பொருத்தப்படும்
  • தானம் பெற்றவருக்கும் தானம் அளித்தவரின் இரத்தமும் ஒரே வகையாக இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை.
  • பலன் : விழித்திரை நோயால் பார்வையிழந்த இரு நபர்களுக்கு

எலும்பு கொடை (எலும்பு தானம்) :

  • ஒருவர் இறந்த பின்னரே அவரது எலும்புகள் எடுக்கப்படும்
  • இயற்கை மரணம் என்றாலும் எடுக்கப்படும்
  • மூளை சாவு என்றாலும் எடுக்கப்படும்
  • பிரேத உடல் உறவினர்களிடம் அளிக்கப்படும் 
  • எலும்பு வங்கி இருக்கும் ஊர்களிலேயே இது கடை பிடிக்கப்படுகிறது
  • எடுக்கப்பட்ட எலும்புகள் எலும்பு வங்கியில் வைக்கப்படும்.
  • தானம் பெற்றவருக்கும் தானம் அளித்தவரின் இரத்தமும் ஒரே வகையாக இருக்க வேண்டும் என்பது அவசியம்
  • இது தவிர இருவரின் HLAக்களும் முரணாக இருக்க கூடாது
  • பலன் : பல  பிணியாளர்களுக்கு

உறுப்புக்கொடை (உறுப்பு தானம்) :

  • மூளை சாவு என்றால் மட்டுமே எடுக்கப்படும்
  • சிறுநீரகங்கள், ஈரல், இதயம், நுரையீரல், தோல் உட்பட பல உறுப்புகள் எடுக்கப்படும்
  • பிரேத உடல் உறவினர்களிடம் அளிக்கப்படும்
  • தானம் பெற்றவருக்கும் தானம் அளித்தவரின் இரத்தமும் ஒரே வகையாக இருக்க வேண்டும் என்பது அவசியம்
  • இது தவிர இருவரின் HLAக்களும் முரணாக இருக்க கூடாது
  • பலன் : பல பிணியாளர்களுக்கு
உடல்கொடை (உடல்தானம்) :

  • இயற்கை மரணம் என்றால் மட்டுமே பெறப்படும்
  • உடல் உறவினர்களிடம்  அளிக்கப்படாது
  • உடல் உடற்கூறியல் பிரிவில் வைக்கப்படும். முதல் வருட மாணவர்கள் உடற்கூறியல் குறித்து படித்த அறிவதற்காக உடல் பயன்படும்
  • அவ்வாறு தானம் அளிக்கப்பட்ட உடலிருந்து கண்களும், எலும்புகளும் எடுக்கப்படலாம். இவை பிணியாளர்களுக்கு பயன் படும்
  • பலன் : கண்களால் இருவருக்கு, எலும்புகளால் பல  பிணியாளர்களுக்கு, மற்றும் மருத்துவ மாணவர்களுக்கு
நன்றி