rss
twitter
    Find out what I'm doing, Follow Me :)

ஸ்பெக்ட்ரம் நடந்தது என்ன?!!! ஒரு சராசரி குடிமகன் பார்வையில்





நண்பர்களே!!!

தேசிய அவமானமான ஸ்பெக்ட்ரம் பற்றி நாம் அறிவோம், அதில் ஒண்ணேமுக்கால் லட்சம் கோடி ரூபாய் அளவுக்கெல்லாம் ஊழல் செய்யப்படவேயில்லை என்றெல்லாம் மக்களே பேச ஆரம்பித்துவிட்டனர். ராஜா கைது தான் செய்யப்பட்டாரே தவிர குற்றம் நிரூபிக்கப்படவில்லை, அதுவரை நாங்கள் அவரை அரவணைத்துக் காப்போம் என்கிறார் முதல்வர். இது தினம் ஒரு அறிக்கை வரும் தேர்தல் நேரம்,மக்கள் சிந்திக்க வேண்டிய காலம், அப்படி ஸ்பெக்ட்ரம் ஊழலில் மெய்யாகவே நடந்தது என்ன ?!!! என்பதை துபாயில் பணிபுரியும் சிவக்குமார் என்னும் பொறியாளர் அருமையாக ஆய்வு செய்து எழுதியுள்ளார், இது இப்போது இமெயிலில் வரத்துவங்கிவிட்டது, இனியேனும் நன்கு படித்தவர்கள் அவசியம் சிரமம் பாராமல் சிந்தித்து வாக்களித்து நாட்டைக்காக்கவேண்டும். அவசியம் இதைப்படித்துவிட்டு ஃபேஸ்புக், ஆர்குட், ட்விட்டர் தளங்களில் ஃபார்வர்டும் செய்யவும்.

க்கள் அனைவரையும் இலவசங்களை மட்டுமே வாங்க தெரிந்த மாக்கான்கள் என்றே நினைத்து விட்டார் நம் முதல்வர். அதற்காகத்தான் தமிழ்நாட்டில் அனைவரும் குழந்தை பெற்றுகொள்கிறார்கள் என்று சொன்னாலும் ஆச்சரிய படுவதற்கு இல்லை. என்னது ஏழைகள் பயன்படுத்தும் அளவிற்கு குறைந்த விலையில் சேவையை கொண்டுவந்தது ராசாவா? மக்களே உண்மையை புரிந்து கொள்ளுங்கள். இந்த புளுகு மூட்டைகளின் பாவத்திற்கு ஆளாகாதீர்கள். விலை குறைந்ததிற்கான காரணத்தை இங்கு குறிப்பிடுகிறேன்.

1999 ஆண்டில் தான் தொலைதொடர்பு உரிமங்கள் வழங்க ஆரம்பிக்கபட்டது. அன்று வெறும் பணம் படைத்தவர்கள் மட்டுமே கைபேசியை பயன்படுத்தினர். எனவே நுகர்வோரின் எண்ணிக்கை மிக குறைவு. சில பல லட்சங்கள் மட்டுமே. தொழில் நுட்பவளமான 1G அல்லது 2G அலைக்கற்றைகள் மிக அதிக அளவில் அரசிடம் கையிருப்பு இருந்துள்ளது. ஆனால் உரிமம் வாங்க உலக அளவிலோ இந்திய அளவிலோ போட்டிகள் இல்லை. விலை கொடுத்து உரிமம் வாங்கியவர்கள் லாபம் பெற நுகர்வோரிடம் நிமிடத்திற்கு அதிக கட்டணம்(In coming and out going ) வசூல் செய்ய கட்டாயம் ஏற்பட்டது. இதில் கவனிக்க வேண்டிய இன்னொரு விஷயம் என்னவென்றால் நாம் தான் வசதி படைத்தவர்களாயிற்றே என்று இஷ்டத்திற்கு பேசி நேரத்தையோ பணத்தையோ அன்றைய வசதி படைத்தவர்கள் விரயம் செய்யவில்லை. குறைவான நேரத்துக்குதான் கைபேசியை பயன்படுத்தினர்.

நுகர்வோரின் எண்ணிக்கை குறைவாக இருந்ததால்தான் அன்று அலைகற்றை உரிமம் பெற அதிக நிறுவனங்கள் முன்வரவில்லை. இதை சரி செய்ய அன்றைய அரசு ஒரு தொலை தொடர்பு புரட்சியை உருவாக்க முயன்றது. விளைவு நாளுக்கு நாள் நுகர்வோரின் எண்ணிக்கை அதிகமானது. இன்றும் அதிகமாகி கொண்டே இருக்கிறது. 2010 நுகர்வோரின் எண்ணிக்கை சுமார் 60 கோடிக்கும் மேல். 2008 இல் 50 கோடிக்கும் மேல். 



தற்கும் அதிகமான மக்கள் பயன்படுத்தும் அளவுக்கு போதிய அலைகற்றைகள் அரசிடம் இன்றும் உள்ளனர். ஆனால் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை வெறும் 60 கோடிதான். 122 தகுதி இல்லாத நிறுவனங்களுக்கு உரிமம் வழங்க பட்டுள்ளது. தகுதி என்றால் என்ன? போதிய அனுபவம், வங்கி காசோலை, வங்கி செக்யூரிட்டி டெபொசிட் அது மட்டும் இல்லை வாங்கியவுடன் குறிப்பிட்ட காலத்திற்குள் சேவையை தொடங்க வேண்டும். இந்த குறிப்பை நினைவில் வைத்து கொள்ளுங்கள். பின்னால் உதவும். டாட்டா, ரிலையன்ஸ் போன்ற பெரிய நிறுவனங்களும் உரிமம் வாங்கியுள்ளனர். இதோடு அந்த 122 தகுதி இல்லாத நிறுவனங்களையும் சேர்த்து கொள்ளுங்கள்.

நியாயக் கணக்கு:

ந்தியாவில் 60 கோடி மக்கள் கைபேசி சேவையை பயன்படுத்துவதாக உண்மை தகவல் உள்ளது. எல்லோருக்கும் தெரியும் என்று நினைக்கிறேன். ஒரு நபர் தனது கைபேசியை ஒரு நாளைக்கு சராசரியாக வெறும் 15 நிமிடங்கள் (LOCAL CALLS ONLY) பயன்படுத்துவதாக வைத்துக்கொள்வோம். ஒரு நிமிடத்திற்கு 40 பைசா கட்டணம். 



ப்போது 15x0.40 =6.0 ரூபாய் ஒரு கைபேசியின் மூலம் செலவாகிறது. 60 கோடி கைபேசிகள். 60x6.0 = 360 கோடிகள் ஒரு நாளைக்கு செலவாகிறது. ஒரு மாதத்திற்கு 30x360 = 10,800 கோடிகள். ஒரு வருடத்திற்கு 12x10,800 = 1,29,600 கோடிகள். 2008 இல் 2G ஏலம் விடப்பட்டது. இன்று வரை இரண்டு வருடங்கள் ஆகிறது. அப்போ து குறைந்தபட்ச வருமானம் இன்றுவரை2,59,200 கோடிகள். இது ஒரு நாளைக்கு வெறும் 15 நிமிடங்கள் கைபேசியை பயன்படுத்தினால் இரண்டு வருடத்திற்கு கிடைத்திருக்கும் வருமானம். 


தோடு SMS, MMS, STD, ISD, சேவை கட்டணம், இணைப்பு கட்டணம்.......இன்னும் என்ன என்னவோ கட்டணங்கள் உள்ளது என்று சொல்கிறார்கள் மற்றும் 15 நிமிடத்திற்கு அதிகமாக பயன்படுத்துவோரின் செலவையும் சேர்த்தால் எத்தனை கோடி கோடிகள் வருமானமாக கிடைக்கும் என்பதை நீங்களே கணக்கிட்டு கொள்ளுங்கள். என்னால் கணக்கிடவே முடியவில்லை. என்னிடம் உள்ள கால்குலேட்டர் மற்றும் கணினி காண்பிப்பது "INFINITIVE". நான் தற்போது இந்தியாவில் இல்லை. இருந்திருந்தால் அனைத்தையும் அலசி ஆராய்ந்து இதைவிட இன்னும் துல்லியமாக நடந்த ஊழலின் அளவை குறிப்பிட்டு இருப்பேன். இந்த வருமானம் அனைத்தும் அரசுக்கு கிடைத்திருக்க வேண்டும். அது மக்களை சென்று அடைந்து இருக்கவேண்டும். கிடைத்ததா? 


க்களை சென்றடைந்ததா? நிச்சயம் இல்லை என்றுதான் ஒவ்வொரு மக்களும் கூறவேண்டும். அப்படி என்றால் இந்த மக்கள் பணம் சட்டத்திற்கு புறம்பாக யாரிடமோ சென்று அடைந்துள்ளது. இந்த ஊழல் பணம் அடுத்த சில ஆண்டுகளில் தனது சொந்தநாட்டு மக்களையே தாக்கப்போகிறது. விலைவாசி உயரும். பொருளாதாரம் நாசாகும். "Above middle Class" மக்கள் நடுத்தர மக்களாகவும், நடுத்தர மக்கள் ஏழைகளாகவும், ஏழை மக்கள் மேலும் பரம ஏழைகளாகவும் மாறுவார்கள். 


னநாயகம் வேரோடு அழியும். மனிதாபிமானம், மனிதநேயம் மண்ணோடு மண்ணாகும். ரௌடிசம்,குற்றசம்பவங்கள் தலைவிரித்து ஆடும். கடந்த ஐந்தாண்டுகளாக ஆயுள் கைதியாக உள்ள நடுநிலை பத்திரிகைகள் இனி மரண தண்டனை கைதிகளாக மாற்றப்பட்டு தூக்கில் போடப்படும்.

துரோகம்-1: உரிமம் வாங்கிய அனைத்து நிறுவனங்களும் சுமார் 13000 கோடிக்கும் அதிகம் பொறுமானம் உள்ள(உதாரணம் S .TEL நிறுவனம்13000 கோடிக்கு வாங்க முன்வந்தது) அலைகற்றைகள் உரிமத்தை அடிமாட்டு விலைக்கு அதாவது 1200 , 1300 ,1650 கோடிகளுக்கு திட்டமிட்டு விற்கப்பட்டுள்ளது. அரசுக்கு சேரவேண்டிய, மக்களுக்கு சேர வேண்டிய வருவாய் சில சுய நலவாதிகளை சென்றடைந்துள்ளது.

துரோகம்-2: பெரும்பாலான நிறுவனங்கள் தங்கள் உரிமத்தின் பங்குகளை வெளி நாட்டு நிறுவனங்களுக்கு விற்று கொள்ளை லாபம் பார்த்துள்ளனர். இதனால் அரசுக்கு அதாவது பல கோடி மக்களுக்கு கிடைக்க வேண்டிய அரசின் வருவாய் சில சுய நல தனி மனிதர்களை சென்று அடைந்துள்ளது.

துரோகம்-3: தகுதி இல்லாமல் உரிமம் வாங்கிய 122 நிறுவங்களில் பெரும்பாலான நிறுவனங்கள் இன்னும் சேவையை தொடங்கவில்லை. இதில் "swan, Unitech" போன்ற லெட்டர் பேட் நிறுவனங்களும் அடங்கும். இந்த நிறுவனகள் ஏன் இன்னும் சேவையை தொடங்கவில்லை என்று உள்ளூர ஆராய்ந்தால் மிக தெளிவாக புரியும். பெரிய நிறுவனங்கள் போட்டி இல்லாமல் தொலைதொடர்பு துறையில் கொள்ளை லாபம் பார்க்க அதாவது கட்டணம் என்ற பெயரில் மக்களின் உழைப்பை சுரண்ட பெரும்பாலான தகுதி இல்லாத பினாமி லெட்டர் பேட் நிறுவனங்கள் இன்னும் சேவையை தொடங்கவில்லை. 



இவைகள் சேவையை தொடங்கி இருந்தால் சந்தையில் போட்டி அதிகமாகி கைபேசியில் பேசும் கட்டணம் இப்போது இருப்பதை விட மேலும் குறைந்திருக்கும். ஒரு வேளை இதற்காகத்தான் திட்டமிட்டு "S.TEL போன்ற போட்டி நிறுவனங்களுக்கு உரிமம் வழங்கவில்லை என்ற சந்தேகம் தெளிவாக எழுகிறது.

துரோகம்-4: MTNL BSNL போன்ற அரசு நிறுவனங்களுக்கு அதிக அளவில் அலைகற்றைகளை ஒதுக்கி போதிய ஆப்பெரடர்களை நியமித்து இருந்தால் கைபேசியில் பேசும் கட்டணம் நிமிடத்திற்கு வெறும் ஒரு பைசாவுக்கு வந்திருக்கும். மக்கள் அரசினால் பயன் அடைந்து இருப்பார்கள்.

துரோகம்-5: தகுதி இல்லாமல் உரிமம் வாங்கிய லெட்டர் பேட் நிறுவனங்கள் தனது பங்குகளை பல வெளி நாட்டு நிறுவனங்களுக்கு விற்றுள்ளனர். அதில் பாகிஸ்தான் போன்ற நாடுகளும் அடங்கும். இந்தியாவின் தொலை தொடர்பு துறையை இந்த நாடுகளும் பயன்படுத்துகின்றனர். இது உள்நட்டு மக்களின் பாதுகாப்புக்கு மிக பெரிய அச்சுறுத்தல்.

துரோகம்-6: நீரா ராடியா தொலைபேசி உரையாடல்கள், CAG ,தொலைதொடர்பு சம்பந்தபட்ட, கைபற்றபட்ட ஆவணங்கள், சம்பந்தபட்ட பிரதமர் அலுவலக கடிதங்கள் புறகணிப்பு, சட்ட,நிதி துறை கடிதங்கள் புறகணிப்பு, TRAI பரிதுரைகள் புறகணிப்பு இப்படி கோடி கணக்கில் ஆதாரங்கள், சாட்சிகள். முதலில் வருபவருக்கே முன்னுரிமை என்று முந்தைய ஆட்சியாளர்கள் வகுத்த அடிப்படை கொள்கை கூட பின்பற்றப்படவில்லை. அதிலும் முறைகேடு.

துரோகம்-7: இவ்வளவு குற்றங்கள் செய்தும் சம்பந்தபட்ட குற்றவாளிகள் செய்த தவறை ஒப்பு கொள்ளாமல் நாங்கள் தவறு செய்யவில்லை என்று மக்களிடம் பொய் பிரச்சாரம் செய்வது மக்களுக்கு இழைக்கப்பட்ட ஏழாவது துரோகம். இதன் உச்சகட்டம்தான் 2G யில் ஊழலும் இல்லை நஷ்டமும் இல்லை என்று மத்திய அமைச்சரின் பத்திரிகை பேட்டி. இந்த உலகத்திலே தான் மட்டும்தான் புத்திசாலி வக்கீல் மற்ற அனைவரும் அடி முட்டாள்கள் என்ற ஆணவ நினைப்பு.

துரோகம்-8: நடந்த அனைத்து தேச துரோகங்களும், குற்றங்களும் பொருளாதார மேதை பிரதமருக்கு தெரிந்தே கண்முன்னே நடந்துள்ளது. இருந்தும் பிரதமர் வாய் மூடி மௌனியாக இருப்பது மக்களுக்கு இழைக்கபடும் மகா மகா துரோகம்.

துரோகம்-9: ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் முறைகேடாக பெறபட்ட பணங்கள் பெரும்பாலானவை இந்தியாவில் புழக்கத்தில் இல்லாமல் அந்நிய நாடுகளில்,வங்கிகளில் முதலீடு செய்யப்பட்டுள்ளதாக தகவல். இந்த பணம் அரசுக்கு வருவாயாக கிடைத்து இருந்தால் ஏராளமான அரசு கல்லூரிகள், பள்ளிகள், பாலங்கள், மருத்துவமனைகள், தொழிற்சாலைகள் என்று உருவாக்கி அனைவருக்கும் கல்வி,வேலைவாய்ப்பு, அடிப்படை வசதிகள் என்று ஏற்படுத்தி ஏழைகளே இல்லாத நாட்டை உருவாக்கி இருக்கலாம். இலவசங்கள் பெறாத மக்களை கண்டிருக்கலாம்.

துரோகம்-10: ஸ்பெக்ட்ரம் ஊழல் பணத்தை பயன்படுத்தி தலித் பற்றும் பிற இனத்தை சேர்ந்த ஏழை விவசாய மக்களிடம் மிரட்டி விளை நிலங்களை அடிமாட்டு விலைக்கு வாங்கப்பட்டதாக தகவல். இது மக்களுக்கு இழைக்கபட்ட துரோகம் பத்து. ஒரு முறைகேட்டை செய்து அதையே மூலதனமாக வைத்து இன்னொரு முறைகேடு செய்யப்பட்டுள்ளது. ஊழல் செய்வதினால் மக்களுக்கு இழைக்கபடும் துன்பங்களுக்கு இதை விட சிறந்த உதாரணம் வேறென்ன வேண்டும். நண்டு கொழுத்தால் வலையில் தங்காது. இதுதான் ஊழலின் விளைவுகள். இவர்கள் ரத்தம் குடிக்கும் கொசுக்கள் மாதிரி. நம்மிடம் உள்ள ரத்தத்தை உறிஞ்சுவதோடு மட்டும் இல்லை அதோடு சேர்த்து நோய் கிருமிகளையும் நமது ரத்தத்தில் விட்டு செல்கின்றனர்.

ப்படி 2G ஊழலில் மக்களுக்கு இழைக்கபட்ட துரோகங்கள் எண்ணில் அடங்காதது. இந்த ஊழலின் தாக்கம் இதோடு நிற்காது. மக்களைத்தான் சுத்தி சுத்தி அடிக்கும். எப்படி? ஊழல் பணத்தை வைத்து ஏழைகளின் நிலங்கள் அடிமாட்டு விலைக்கு வாங்கப்பட்டு அதை பிளாட் போட்டு அதே மக்களிடம் அதிக விலை வைத்து விற்கப்படுகிறது. 

ரு ஏக்கரை குறைந்த விலைக்கு விற்ற மக்கள் அந்த பணத்தை வைத்து அதே இடத்தில் அதாவது முந்தைய சொந்த இடத்தில ஒரு கிரௌண்ட் நிலம் கூட வாங்க முடியவில்லை. இதுதான் ஊழலின் விளைவு. இப்போது புரிந்து இருக்கும் ஏழைகள் எப்படி உருவாகிறார்கள் என்று. இது மட்டும் இல்லை ஊழல் பணத்தை வைத்து அனைத்து இடங்களையும் வளைத்து போட்டு ரியல் எஸ்டேட் நடத்தும் அனைத்து அரசியல்வாதிகளும் இப்படி ஊழல் பணத்தில்தான் செய்கின்றனர். 

வர்கள் சொல்வதுதான் விலை. விலைவாசி உயர்வது இயற்கை அல்ல. அனைத்தும் மிக மிக செயற்கையே. இயற்கை என்று ஆளும் கட்சியினர் கூறுவது தவறு. உண்மையை மூடி மறைக்கும் செயல். இது ரியல் எஸ்டேட் மட்டும் இல்லை. அனைத்து பொருள்களுக்கும் பொருந்தும். குறைந்த விகிதத்தில் உள்ள பணக்காரர்கள் மேலும் பணக்காரர்கள் ஆவார்கள். அதிக விகித்தில் உள்ள நடுத்தர மக்கள், ஏழைகள் மேலும் ஏழைகளாக ஆவார்கள். இந்த ஏழை, பணக்காரன் இடை வெளியை குறைக்கத்தான் அரசாங்கம் ஒன்றை மக்கள் தேர்ந்தெடுக்கிறார்கள்.

ன்று ஆளும் வர்க்கத்தினரே அதற்கு முழு முதல் காரணமாக திகழ்கிறார்கள். சொல்லபோனால் அரசின் கடமைகளை அரசியல்வாதிகளும் மறந்துவிட்டனர். இவர்களை தேர்ந்தெடுக்கும் மக்களும் தங்கள் கடமைகளை மறந்து இலவசத்துக்கு பின் செல்கின்றனர். இலவசம் வாங்கும் மக்களே ஒன்றை நன்றாக தெரிந்து கொள்ளுங்கள்.

ங்கள் உழைப்பு என்னும் மூலதனத்தை மறந்து இலவசம் வாங்குவதால் எத்தனை தலைமுறைகள் கடந்தாலும் நீங்கள் ஏழைகளாகத்தான் இருக்க முடியும். உங்கள் வாழ்கை தரமும் உயரபோவதில்லை. இலவசம் கொடுக்க தேவையான வரிபணத்தை செலுத்தும் உழைக்கும் மக்களின் வாழ்கை தரமும் உயரபோவதில்லை. இது நிச்சயம். மாற்றம் ஒன்றே மாறாதது. இலவசம் மாறவில்லை என்றால் உங்கள் வாழ்கை தரமும் மாறபோவதில்லை.

னது நோக்கமே இந்த 2G உலக மகா ஊழலால் மக்கள் எவ்வாறு வஞ்சிக்கபட்டார்கள் என்பதை ஒவ்வொரு இந்திய குடிமகனும் பத்திரிகை நிறுவனங்களில் பணிபுரியும் நண்பர்கள் உள்பட அனைவரும் தெரிந்து கொள்ளவேண்டும் என்பதுதான். எனவே தெரிந்துகொள்ளுங்கள், புரிந்துகொள்ளுங்கள். ஒவ்வொரு ஏழை மக்களுக்கும் தெரியபடுத்துங்கள். ரோட்டில் இறங்கிதான் போராடவேண்டும் என்று இல்லை.கொடி பிடிக்க அவசியமும் இல்லை. e -mail, FAX , Facebook , orkut என்று எவ்வளவோ தொழில் நுட்ப வசதி உள்ளது. தங்களுக்கு உகந்த ஏதேனும் ஒன்றை தேர்வு செய்து தங்களின் அன்றாட வேலைகள் பாதிக்காத வகையில் சுலபமாக இதை செய்யமுடியும். செய்வீர்கள் என்று நினைக்கிறேன். நன்றி.



விளம்பரங்கள் ???


இந்த விளம்பரங்கள் இருக்கே அது தான் முக்கால் வாசி நேரம் வருது. அதை பாக்குறது கொடுமை. அவங்க பண்ற அலும்பல் அதை விட கொடுமை. :(நான் பார்த்த கொடுமைகளில் சிலவற்றை கலாய்த்திருக்கிறேன். :twisted:
க்ளோஸ் அப் டூத் பேஸ்ட் - இந்த பேஸ்டை வச்சு பல் தேய்க்கிறவங்க தான் முத்தம் கொடுக்க முடியுமா? என்ன நியாயம் இதுஅப்போ உலகத்துல பாதி பேரு முத்தமே கொடுக்க முடியாதே. பல்லே தேய்க்காத ஆடு, மாடெல்லாம் என்ன செய்யும்கிஸ்ஸோமீட்டர் சேலஞ்ச். கருமம். கருமம். ஒருத்தன் ஊதுனா ரோஜாப்பூ வாடிடுமாம் அதே க்ளோஸ்-அப் யூஸ் பண்றவன் ஊதுனா வாடின பூ மலர்ந்திடுமாம். கேக்குறவன் கேனப்பயலா இருந்தா கே.எஸ். ரவிக்குமார் கேட் வின்ஸ்லெட் கூட ஜோடி சேர்ந்தாருன்னு சொல்லுவாங்க :roll:
•  ஆக்ஸ் - இந்த செண்ட் அடிச்சா எல்லா பொண்ணுங்களும் பின்னாடியே வந்துருமாம். (த்ரிஷா வருமா, இல்லை அனுஷ்கா தான் வருமா?) அப்படின்னா இந்நேரம் ஒரு தேவதாஸ் கூட இருக்கமாட்டானே :lol:
•  லக்ஸ் - இந்த சோப் போட்டுக்கிட்டு அசின் நடந்தா அந்த இடத்துக்கு லைட்' தேவைப்படாதாம் அவ்ளோ பிரகாசமா இருக்குமாம். மக்களே யார் வீட்டிலாவது கரெண்ட் போச்சுன்னா உடனே லக்ஸ் போட்டு குளிங்க. அந்த இடமே பிரகாசமா இருக்கும் :shock:
•  வாசன் கேர் - இவங்க பண்ற அலும்பல் இருக்கே. கண்ணு நொள்ளையான 60 வயசு கிழவிக்கு இவங்க கண் பார்வை தருவாங்களாம். நாங்க இருக்கோம் நாங்க இருக்கோம்னு சொல்றாங்க உங்க கிட்ட பில்  கட்டிட்டு நாங்க  உசுரோட இருப்போமா டா :-?
கல்யாண் ஜுவல்லர்ஸ் - சுத்தமா புரியாத விளம்பரம் இது. மொதல்ல பிரபுவோட பொண்ணு ஓடி போற மாதிரி ஒரு கதை, இப்போ பிரபுவும் சீதாவும் குடும்பம் நடத்துற மாதிரி ஒரு கதை. நகைக்கும் விளம்பரத்துக்கும் என்னப்பா சம்மந்தம் ?  இதுல பஞ்ச் வேற நம்பிக்கை அதானே எல்லாம் :o
பொம்மீஸ் நைட்டீஸ் - இந்த நைட்டியை போட்டா தான் குடும்பத்தலைவி ஃபீலிங் வருதாம். சண்டை போடணும்னு நினைச்சாலும் இந்த நைட்டி போட்டுட்டு வர்றவங்களைப் பார்த்தா சமாதானமா போய்டுவாங்களாம். அப்போ காஷ்மீர் பார்டருக்கு ஒரு டஜன் நைட்டி பார்செல் பண்ணுங்க. எல்லாரும் சமாதானமா போகட்டும் :lol:
•  கோல்கேட் - மைக் எடுத்துட்டு வந்துடுவாங்க உங்க டூத் பேஸ்ட்' உப்பு இருக்கா? அவனவன் சோத்துல போடுறதுக்கே உப்பு இல்லை. இதுல பல்லு விளக்க உப்பு வேணுமாக்கும் :twisted:
•  ஐடியா சிம் கார்ட்: பேசுவதற்கு மொழி தேவையில்லை. அடங்கொப்புரானே பேச மொழி தேவையில்ல வாய் இருந்தா போதும்இது தெரியாம் நிறைய பேரு இந்த சிம் கார்டை வாங்கி நாசமா போறாங்க:(
•  ஹமாம் - ஏன்  சொறியிற காமி காமின்னு ஆரம்பிக்கும் இந்த விளம்பரம். யாராவது சொறிஞ்சா அதுக்கு கொசு/ மூட்டை பூச்சி. இல்லை மிஞ்சி போனா குளிக்காம இருந்தா  தான் காரணம்னு நினைச்சா. ஹமாம் சோப் போட்டு குளிக்கலைன்னா சொறி வருமா? எந்த ஊரு நியாயம் நான்சென்ஸ் :evil:



நீங்க ஆபிஸ்ல ஓவரா சீன் போடுபவரா...??


ஒரு சலவை தொழிலாளிகிட்ட ஒரு நாயும்கழுதையும் இருந்துச்சு.
ஒரு நாள் அந்த சலவை தொழிலாளி ராத்திரி நல்லாதூங்கிட்டுருக்கும்போது 
வீட்டுக்குள்ள கதவை உடைச்சிட்டு ஒருதிருடன் வந்துட்டான்.
 சலவை தொழிலாளி நடப்பது தெரியாமல்நல்ல உறக்கத்திலிருக்க
திருடனைப்பார்த்த நாய் குரைக்காமல்கம்முன்னு இருந்துச்சு.

சரியா சோறே போடறதில்லை
இவனுக்கு நாம ஏன் உதவிபண்ணனும்னு நாய் குரைக்கவில்லை
அதைப்பார்த்த கழுதைஎன்னடா இவன் கம்முன்னு இருக்கான்,
 குரைச்சு முதலாளியைஎழுப்புவான்னு பார்த்தா சும்மா இருக்கான்,
 சரி நாமளாவது சத்தம்போட்டு முதலாளிக்கு திருடன் வந்ததை அலர்ட் பண்ணுவோம்னுகத்த ஆரம்பிச்சுது
சத்தம் கேட்டதும் கள்ளன் ஓடிவிட்டான்.
சத்தத்தில் தூக்கத்தில் இருந்து எந்திருச்ச சலவைதொழிலாளி 
ஒருகட்டையை எடுத்து பளார்னு கழுதை தலைல ஒரே அடி
கூறுகெட்டகழுதை நேரங்காலம் தெரியாம கத்திகிட்டு இருக்கேன்னு கழுதையைதிட்டிவிட்டு திரும்பவும் படுத்துகிட்டான்.

நீதி : ஆபிஸ்ல என்னவேலை கொடுத்திருக்கோஅதைமட்டும்தான் செய்யனும் ஓவரா சீன் போட்டாஇப்படித்தான்.


இந்தக்கதை மற்றொரு கோணத்தில்...

கழுதை கத்தியதும் எழுந்த சலவைத்தொழிலாளி
கழுதை சும்மாகத்தியிருக்காது காரணாமாகத்தான் கத்தியிருக்கும் 
என்று எழுந்துபார்த்து திருடன் வீட்டுக்கு 
வந்ததால்தான் கழுதை கத்தியதுஎனப்புரிந்துக்கொண்டான்
அடுத்த நாள் கழுதைக்கு வகைவகையானசாப்பாடு போட்டான்
நாயைக்கண்டுகொள்ளவே இல்லை.

கழுதையோட ஆர்வக்கோளாறும்விசுவாசமும் முதலாளிக்குபிடித்துவிட
 இவன் ரொம்ப நல்லவன்டா எவ்ளோ வேலைகொடுத்தாலும் செய்யிறான்னு முதலாளியின் எல்லாவேலைகளையும் கழுதையை செய்ய வைத்தான்
நாய்செய்துக்கொண்டிருந்த வேலையும் கழுதையின் மேல்சுமத்தப்பட்டது.
 நாய் சுகமாக வேலையே செய்யாமல் கழுதையைபார்த்து சிரித்துக்கொண்டிருந்ததுவேலை செய்து அலுத்துப்போனகழுதை இப்போது வேறு வேலைக்கு சிவி அனுப்பிகிட்டிருக்கு...

நீதிஆபிஸ்ல ஓவரா சீன்போட்டா இப்படியும் நடக்கலாம்.

  

அறிவை குறைக்கும் நொறுக்குத் தீனி: ஆய்வில் தகவல்

குழந்தைகளின் நுண்ணறிவுத் திறனை (ஐ.க்யூ.,), "ஜங்க் புட்' குறைத்து விடுவதாக சமீபத்தில் வெளியான ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது."ஜங்க் புட்' எனப்படும், நொறுக்குத் தீனிகளைத் தடை செய்வது குறித்து இந்தாண்டின் இறுதியில் ஐ.நா., ஆலோசனை நடத்த உள்ளது. இந்நிலையில், பிரிஸ்டன் பல்கலையைச் சேர்ந்த டாக்டர்.கேட் நார்த்ஸ்டோன் என்பவர் தலைமையில் ஓர் ஆய்வு நடந்தது. நான்கு வயதுக்குக் குறைந்த நாலாயிரம் குழந்தைகளிடம் அவர்களின் நுண்ணறிவுத் திறன் ஆய்வு செய்யப்பட்டது.அவர்கள் உண்ணும் நொறுக்குத் தீனிகளுக்கு ஏற்ப, நுண்ணறிவுத் திறன் குறைவது கண்டறியப்பட்டது. சராசரியாக, 1.67 சதவீதம் இயல்பு நிலையில் இருந்து குறைவது தெரியவந்தது. இந்த இழப்பை சரி செய்ய முடியாது என்றும் ஆய்வு கூறுகிறது.

இதுகுறித்து நார்த்ஸ்டோன் கூறியதாவது:பிரிட்டனில் குழந்தைகள், மோசமான உணவு மற்றும் பதப்படுத்தப்பட்ட, சர்க்கரை மற்றும் கொழுப்பு அதிகளவில் உள்ள உணவுகளை மட்டுமே பெருமளவில் உண்பதால், எட்டரை வயதில் அவர்களின் நுண்ணறிவுத் திறனில் பெரும் குறைபாடு நிகழ்கிறது.ஆனால், ஆரோக்கியமான உணவு முறை, நுண்ணறிவுத் திறனை அதிகரிக்கிறது. இந்த வயதில், நல்ல ஊட்டச் சத்துள்ள உணவுகளைக் கொடுத்தால் அவர்களின் மூளை வளர்ச்சி நன்றாக இருக்கும்.இவ்வாறு நார்த்ஸ்டோன் தெரிவித்தார்.

மாருதியின் புதிய சொகுசு கார்

 
இந்தியாவில் கார் விற்பனையில் மாருதி சுசூகி நிறுவனம் முதலிடத்தில் இருந்தாலும், விலை அதிகமான சொகுசு கார் விற்பனையில் பின் தங்கிய நிலையில் தான் இருந்து வந்தது. இந்த பிரிவில் மாருதி நிறுவனத்தின் எஸ்எக்ஸ் 4 கார் மட்டுமே விற்பனையில் உள்ளது. இந்த சூழ்நிலையில்,'கிஷாஷி' என்ற புதிய காரை, மாருதி சுசூகி நிறுவனம் சமீபத்தில் அறிமுகப்படுத்தியது. இந்த காரில் 2.4 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. மேனுவல் மற்றும் ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் என இரண்டு மாடல்களில் இந்த கார் கிடைக்கும். இதில் 6 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் வசதி கொண்ட காரின் விலை ரூ.16.5 லட்சம்(எக்ஸ்ஷோரூம் டில்லி). 6 ஸ்பீடு ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வசதி கொண்ட காரின் விலை ரூ.17.5 லட்சம். இந்த காருக்கான முன்பதிவு ஏற்கனவே துவங்கி விட்டது. மார்ச் மாதம் முதல் டெலிவரி துவங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கார், வெளிநாட்டில் உற்பத்தி செய்யப்பட்டு, இந்தியாவுக்கு முழுமையாக இறக்குமதி செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த கார், ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு 12.45 கி.மீ., மைலேஜ் தரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

27 ஆண்டுகளாக வீடுகளுக்கு மின் இணைப்பு இல்லை: 21 ம் நூற்றாண்டில் இப்படியும் ஒரு கிராமம்!!

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் 27 ஆண்டாக வீடுகளில் மின்இணைப்பு இல்லாத பரிதாப கிராமம் உள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் ஊராட்சியில் உள்ளது முந்தல்முனை. 110 குடும்பங்கள் வசிக்கும் இப்பகுதி ராமேஸ்வரம் கோயில் தேவஸ்தானத்திற்கு பாத்தியமானது. 1983ல் உருவான இக்கிராமம் 500க்கும் அதிகமான மக்கள் தொகை கொண்டது. இன்று வரை இப்பகுதியில் மின்சாரம் இல்லை. 1993ல் இருந்து மின்வசதி கேட்டு முறையிட தொடங்கிய இவர்களுக்கு , 1996ல் மீன்வளத்துறை சார்பில் சிறப்பு திட்டம் ஒன்றில் 11 மின்கம்பங்கள் அமைத்து தெருவிளக்குகள் அமைக்கப்பட்டன. ஆனால் வீடுகளுக்கு மின்இணைப்பு வழங்கவில்லை. "வீட்டு ரசீது இருந்தால் மட்டுமே இணைப்பு தரமுடியும்,' என, மின்வாரியத்தினரும், "ஆரம்ப காலத்திலிருந்து தங்கியதற்கான பணத்தை கட்டினால் மட்டுமே ரசீது தரப்படும்,' என, தேவஸ்தான அதிகாரிகளும் கைவிரித்து விட்டனர். ஒரே நேரத்தில் குறிப்பிட்ட தொகையை செலுத்த முடியாத நிலையில், மின்சார கோரிக்கைக்கு அக்கிராமத்தினர் முற்றுப்புள்ளி வைத்துவிட்டனர்.


கடந்த லோக்சபா தேர்தலில், ""இப்பகுதியின் வீடுகளுக்கு மின்சார வசதி செய்து தருவதாக,'' தி.மு.க.,வின் ரித்தீஷ்குமார் எம்.பி., வாக்குறுதி கொடுத்தார். வெற்றி பெற்ற அவரும் இன்று வரை கண்டுகொள்ளவில்லை. அரசு தரப்பில் அனைவருக்கும் இலவச "டிவி' வழங்கப்பட்டுள்ளது. அவற்றை உபயோகப்படுத்த முடியாத நிலையில், இடத்தை அடைக்கும் என்பதால், தெரு ஓரத்தில் "டிவி'க்களை அடுக்கி வைத்துள்ளனர். வீடு தவறாமல் சிம்னி விளக்கும், மாலை நேரத்தில் தெருவிளக்கு படிப்பும் தான் இக்கிராம மக்களின் வழக்கமான நடவடிக்கை

தனியாரை போல் கலக்கும் கர்நாடகா; கலகலக்கும் தமிழகம்

தனியாருக்கு இணையாக, கர்நாடக மாநில போக்குவரத்துக் கழகம், நவீன பஸ்கள் இயக்கம் மற்றும் பராமரிப்பு பணிகளில் அக்கறை காட்டுகிறது. தமிழக அரசு போக்குவரத்துக் கழகம், புதிதாக இயக்கிய பஸ்களையும் முறையாக பராமரிக்காமல், மக்களின் நம்பிக்கையை வீணடித்து வருகிறது.

தமிழகத்தில், அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் உள்ளிட்ட, எட்டு போக்குவரத்துக் கழகங்கள் மூலம், 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பஸ்கள் இயக்கப்படுகின்றன. இப்போக்குவரத்துக் கழகங்கள், தற்போது, 1,000 கோடி ரூபாய் நஷ்டத்தில் சிக்கி தத்தளிக்கின்றன.இலவச பஸ் பாஸ் அதிகளவில் வழங்கியது, டிக்கெட் கட்டணத்தை உயர்த்தாதது உள்ளிட்ட காரணங்களால், போக்குவரத்துக் கழகங்கள் நஷ்டத்தில் இயங்கி வருகின்றன என கூறப்பட்டாலும், முறையான பராமரிப்பின்மையும் இதற்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது.சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து, வெளியூர்கள் செல்லும், 50 சதவீத பயணிகள், தனியார் ஆம்னி பஸ்களை அதிகளவில் பயன்படுத்துவதே, இதை வெளிச்சம் போட்டு காட்டுவதாக உள்ளது. ஆம்னி பஸ்களிலும் சிறப்பு சீட்கள், படுக்கை, "ஏசி', கழிவறை உள்ளிட்ட, அதிநவீன வசதிகள், ரயில்கள் மற்றும் விமானத்திற்கு இணையாக உள்ளன.

தமிழக அரசு பஸ்களில், "ஏசி' வசதி இருந்தாலும், அவற்றில் முறையான பராமரிப்பின்மையால், துர்நாற்றம் வீசுவதால், குமட்டலுடன் பயணிக்க வேண்டிய நிலையுள்ளது."ஏசி' பஸ்களின் முன்பக்க கண்ணாடியை தவிர்த்து, பிற கண்ணாடிகள் உடைந்துள்ளன. அவை, அட்டை, இரும்பு தகடுகள் வைத்து மறைக்கப்பட்டுள்ளன. "ஏசி' வசதியிருந்தும், அனல் பறக்கும் காற்றுடன் இந்த பஸ்களில் பயணம் செய்ய வேண்டியுள்ளது.இன்ஜின் கோளாறு உள்ளிட்ட காரணங்களால், அரசு பஸ்களை குறித்த நேரத்திற்கு சென்று சேர்க்க, டிரைவர்களால் முடிவதில்லை. இதுவே, அரசு பஸ்களை காட்டிலும், ஆம்னி பஸ்களை மக்கள் நாடிச் செல்ல காரணமாக அமைந்துள்ளது.

ஆனால், தமிழக போக்குவரத்துக் கழகங்களில் இருந்து முற்றிலும் மாறுபட்டு, கர்நாடக அரசு போக்குவரத்துக் கழகம் (கே.எஸ்.ஆர்.டி.சி.,) இயங்குகிறது. இப்போக்குவரத்துக் கழகத்தில், 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பஸ்கள், ஹைராவட், ராஜ ஹம்சா, மெர்சிடீஸ் பென்ஸ், சீத்தல், கரோனா அம்பாரி, கரோனா அம்பாரி சிலீப்பர் ஆகிய பெயர்களில், சாதாரண இருக்கைகள் முதல், "ஏசி' படுக்கை வசதிகள் கொண்டவையாக இயக்கப்படுகின்றன.தமிழக அரசு போக்குவரத்துக் கழகங்களில், இதுவரை, படுக்கை வசதி கொண்ட பஸ்கள் இயக்கப்படவில்லை. தமிழக அரசு பஸ்களை போல மூட்டைப் பூச்சி, விஷ வண்டு கடிகளும் கர்நாடக அரசு பஸ்களில் இருப்பதில்லை.பயணிகள் வசதிகளை மட்டுமே கருத்தில் கொண்டு, நவீன முறையில் கர்நாடக பஸ்கள் பராமரிக்கப்படுகின்றன.

இதனால், கர்நாடக அரசு பஸ்களில் பயணிக்க பலர் ஆர்வம் காட்டுகின்றனர். பெங்களூரு ஐ.டி., நிறுவனங்களில் பணிபுரியும் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள், கர்நாடக அரசு பஸ்களில் தான் பயணிக்கின்றனர்.கர்நாடக அரசு பஸ்கள், "கலக்கும்' நிலையில், தமிழக அரசு பஸ்கள், "கலகலத்து' வருகின்றன. அந்தளவிற்கு, தமிழகத்தில் அரசு பஸ்கள் பராமரிப்பு என்பதே கேள்விக்குறியாக உள்ளது. கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்பு வழங்கப்பட்ட புதிய பஸ்கள் பராமரிப்பின்றி சேதமடைந்து ஓட்டை, உடைசல்களாக மாறி வருகின்றன.

இந்தியாவில் முதலிடம் : கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்பு, தமிழக அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்தில் அறிமுகம் செய்த ஆன்-லைன் டிக்கெட் முன்பதிவு திட்டம், 2006ல் இருந்தே கர்நாடக அரசு போக்குவரத்துக் கழகத்தில் செயல்படுகிறது.எலக்ட்ரானிக் மிஷினில் டிக்கெட் வழங்குவதும், இப்போக்குவரத்துக் கழகத்தில், 100 சதவீதம் செயல்படுத்தப்பட்டுள்ளது. பல, தமிழக அரசு பஸ்கள், இன்னும் இன்சூரன்ஸ் செய்யாமல் இயங்குவதால், பாதிக்கப்பட்டவர்களுக்கு நஷ்ட ஈடு வழங்க முடியாமல், பஸ்கள், "ஜப்தி' செய்யப்படும் நிலை தொடர்கிறது.ஆனால், 2002 முதல், கடந்த ஆண்டு வரை, கர்நாடக அரசு போக்குவரத்துக் கழகம், பயணிகள் இழப்பீட்டு தொகையாக, 3 கோடியே 23 லட்சம் ரூபாய் வழங்கியுள்ளது. பராமரிப்பு, நவீன மயம் மட்டுமின்றி இது போன்ற நடைமுறையாலும் இந்தியாவிலேயே முதலாவதாக கர்நாடக அரசு போக்குவரத்துக் கழகம் திகழ்கிறது. அதனால், மத்திய அரசின் பல்வேறு விருதுகளையும் குவித்து வருகிறது. நாள் தோறும், 6 கோடி ரூபாய் அளவிற்கு வருவாய் ஈட்டி, லாபத்திலும் இயங்குகிறது

புதிய போர் விமானங்கள் வாங்க இந்தியா ஒப்பந்தம்

புதுடில்லி : அமெரிக்காவிடம், புதிய போர் விமானங்களை வாங்குவது தொடர்பாக இந்தியா ஒப்பந்தம் செய்துள்ளது.

ஆசியாவில் மூன்றாவது மிகப்பெரிய பொருளாதார வல்லரசாக திகழும் இந்தியா, அடுத்த ஐந்து ஆண்டுகளில், நாட்டின் பாதுகாப்புக்காகவும், படைகளை நவீனப்படுத்துவதற்காகவும், ஒரு லட்சத்து 38 ஆயிரம் கோடி ரூபாயை செலவிட திட்டமிட்டுள்ளது.அமெரிக்காவின் "நார்த்ரோப் குருமான்' என்ற ஆயுத தயாரிப்பு நிறுவனத்திடம், புதிதாக 126 போர் விமானங்களை வாங்க முடிவு செய்துள்ளது. இதற்கான ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இந்த விமானங்களை வாங்குவதற்காக, இந்தியா 50 ஆயிரத்து 600 கோடி ரூபாயை ஒதுக்கியுள்ளது. இதுதவிர, விமான கட்டுமான தொழில்நுட்பங்கள், ரேடார்களும் வாங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அமெரிக்காவின் "நார்த்ரோப் குருமான் நிறுவனத்திடமிருந்து தான், அமெரிக்காவின் ராணுவ தலைமையகமான "பென்டகனும்' பெருமளவு ஆயுதங்களை கொள்முதல் செய்கிறது.இதேபோன்று, இந்திய கடற்படையை வலுப்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. கடற்படைக்கு புதிதாக 12 கப்பல்கள் மற்றும் போர் விமானங்களை வாங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், எச்சரிக்கைக் கருவிகள், ஆளில்லா விமானங்களை வாங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக கடற்படை அதிகாரிகள் கூறியுள்ளனர்.

மாயாவதியின் ஷூவை கிளீன் செய்த போலீஸ் :ஜனாதிபதி விருதுபெற்ற டி.எஸ்.பி.,இப்படியா?

லக்னோ: உத்திரபிரதேச மாநில முதல்வர் மாயாவதியின் ஷூவை பாதுகாப்புக்கு வந்த போலீஸ் அதிகாரி ஒருவர் தனது கர்ச்சீப்பால் குனிந்து சுத்தம் செய்த சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. மாயாவதி என்றாலே ஏதாவது ஒரு விஷயத்தில் பேசப்படும் ஆளாக இருந்து வருகிறார்.

மநிலம் முழுவதும் தனது உருவ சிலைகள், கோடிக்கணக்கில் ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை கோர்த்து பணமாலையாக தொண்டர்கள் அணிவித்தனர், பின்னர் ஆடம்பரத்தின் வெளிப்பாடாக அவரது கட்சி மூத்த தலைவர்களின் பெயரில் பூங்காக்ககள் என அமைத்து சுப்ரீம் கோர்ட் கண்டனத்தை வாங்கி கொண்டார்.

இந்நிலையில் அவுரியா பகுதியில் நடக்கும் ஒரு நிகழ்ச்சிக்கு சென்ற மாயாவாதி சிறப்பு ஹெலிகாப்டர் மூலம் வந்து இறங்கினார். கிளம்பிய புகை காரணமாக அவரது கால் ஷூ முழுவதும் தூசு படிந்தது. இவருடன் வந்த பெர்சனல் செக்ரியூட்டி ஆபீசர் (பி.எஸ்.ஓ.,) மாயாவதியை நோக்கி ஓடினார். பின்னர் அவர் தனது பேண்ட் பாக்கெட்டில் இருந்த கர்ச்சீப்பை எடுத்து காலடியில் குனிந்து சுத்தம் செய்தார். அவர் கிளீன் செய்தது கண்டுகொள்ளவில்லை. அவர் சகவாசமாக அதிகாரிகளுடன் பேசிக்கொண்டிருந்தார்.


இதனையடுத்து அவர் கிளம்பி சென்றார். ஒரு பாதுகாப்புக்கு வந்த போலீஸ் இப்படி அடிமைத்தனமாக நடத்திக்காட்டியது பெரும் கண்டனத்திற்குள்ளாகியிருக்கிறது. எதிர்கட்சியான சமாஜ்வாடி கட்சியினர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இக்கட்சியின் தலைவரும் முன்னாள் முதல்வருமான முலாயம்சிங் கூறுகையில் இது இந்த மாநிலத்தில் சட்டம் ஒழுங்‌கு கெட்டு விட்டதையே காட்டுகிற‌து என கூறியுள்ளார்.

வாழ்க ஜனநாயகம் , வளர்க இந்தியா.


ஸ்பெக்டரம் ஊழலும் துரோகப் பட்டியலும்!





ஸ்பெக்டரம் ஊழலும் துரோகப் பட்டியலும்! - வாசகர் சிறப்புக் கட்டுரை


மக்கள் அனைவரையும் இலவசங்களை மட்டுமே வாங்கத் தெரிந்த மாக்கள் என்றே நினைத்துவிட்டார், தமிழக முதல்வர் கருணாநிதி,

ஏழைகள் பயன்படுத்தும் அளவுக்கு குறைந்த விலையில் சேவையை கொண்டுவந்தது முன்னாள் மத்தியத் தொலைத் தொடர்பு அமைச்சர் ஆ.ராசாவா? விலை குறைந்தன் காரணம் இதுவே...

கடந்த 1999 ஆண்டில் தான் தொலைத்தொடர்பு உரிமங்கள் வழங்க ஆரம்பிக்கபட்டது. அன்று வெறும் பணம் படைத்தவர்கள் மட்டுமே கைபேசியை பயன்படுத்தினர். எனவே நுகர்வோரின் எண்ணிக்கை மிக குறைவு. சில பல லட்சங்கள் மட்டுமே. தொழில்நுட்ப வளமான 1G அல்லது 2G அலைக்கற்றைகள் மிக அதிக அளவில் அரசிடம் கையிருப்பு இருந்துள்ளது. ஆனால், உரிமம் வாங்க உலக அளவிலோ இந்திய அளவிலோ போட்டிகள் இல்லை.

விலை கொடுத்து அலைக்கற்றை உரிமம் வாங்கியவர்கள் லாபம் பெற, நுகர்வோரிடம் நிமிடத்துக்கு அதிக கட்டணம் (In coming and out going ) வசூல் செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இதில் கவனிக்க வேண்டிய இன்னொரு விஷயம் என்னவென்றால், நாம் தான் வசதி படைத்தவர்களாச்சே என்று இஷ்டத்துக்கு பேசி நேரத்தையோ பணத்தையோ அன்றைய வசதி படைத்தவர்கள் விரயம் செய்யவில்லை. குறைவான நேரத்துக்குதான் கைபேசியை பயன்படுத்தினர்.



செல்பேசி நுகர்வோரின் எண்ணிக்கை குறைவாக இருந்ததால்தான் அன்று அலைகற்றை உரிமம் பெற அதிக நிறுவனங்கள் முன்வரவில்லை. இதை சரிசெய்ய  அன்றைய அரசு ஒரு தொலைத் தொடர்பு புரட்சியை உருவாக்க முயன்றது. அதன் விளைவாகவே நாளுக்கு நாள் நுகர்வோரின் எண்ணிக்கை அதிகமானது. இன்றும் அதிகமாகி கொண்டே இருக்கிறது.

2010 செல்பேசி பயன்படுத்துவோரின் எண்ணிக்கை சுமார் 60 கோடிக்கும் மேல். 2008-ல் 50  கோடிக்கும் மேல். இதற்கும் அதிகமான மக்கள் பயன்படுத்தும் அளவுக்கு போதிய அலைகற்றைகள் அரசிடம் இன்றும் உள்ளன. ஆனால் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை வெறும் 60 கோடிதான். 122 தகுதி இல்லாத நிறுவனங்களுக்கு உரிமம் வழங்கபட்டுள்ளது.

தகுதி என்றால் என்ன? போதிய அனுபவம், வங்கி காசோலை, வங்கி செக்யூரிட்டி டெபொசிட் அது மட்டும் இல்லை - வாங்கியவுடன் குறிப்பிட்ட காலத்துக்குள் சேவையை தொடங்க வேண்டும். (இந்தக் குறிப்பை நினைவில் வைத்து கொள்ளுங்கள். பின்னால் உதவும்) டாட்டா, ரிலையன்ஸ் போன்ற பெரிய நிறுவனங்களும் உரிமம் வாங்கியுள்ளனர். இதோடு அந்த 122 தகுதி இல்லாத நிறுவனங்களையும் சேர்த்து கொள்ளுங்கள்.

நியாய கணக்கு...

இந்தியாவில் 60 கோடி பேர் கைபேசி சேவையை பயன்படுத்துவதாக உண்மை தகவல் உள்ளது. ஒரு நபர் தனது கைபேசியை ஒரு நாளைக்கு சராசரியாக வெறும் 15 நிமிடங்கள் (LOCAL CALLS ONLY) பயன்படுத்துவதாக வைத்துக்கொள்வோம். ஒரு நிமிடத்துக்கு 40 பைசா கட்டணம். அப்படியென்றால், 15 x 0.40 = 6.0 ரூபாய், ஒரு கைபேசியின் மூலம் செலவாகிறது. 60  கோடி கைபேசிகள். 60x 6.0 = 360 கோடிகள் ஒரு நாளைக்கு செலவாகிறது. ஒரு மாதத்துக்கு 30 x 360 = 10,800 கோடிகள். ஒரு வருடத்துக்கு 12x10,800 = 1,29,600 கோடிகள். 2008-ல் 2G ஏலம் விடப்பட்டது. இன்று வரை இரண்டு வருடங்கள் ஆகிறது. அப்படியெனில், குறைந்தபட்ச வருமானம் இன்று வரை ரூ. 2,59,200 கோடிகள். இது ஒரு நாளைக்கு வெறும் 15 நிமிடங்கள் கைபேசியை பயன்படுத்தினால், இரண்டு வருடத்துக்கு கிடைத்திருக்கும் வருமானம். இதோடு SMS, MMS, STD, ISD, சேவை கட்டணம், இணைப்பு கட்டணம்... இன்னும் என்னென்னவோ கட்டணங்கள் உள்ளது என்று சொல்கிறார்கள். அத்துடன், 15 நிமிடத்துக்கு அதிகமாக பயன்படுத்துவோரின் செலவையும் சேர்த்தால் எத்தனை கோடி கோடிகள் வருமானமாக கிடைக்கும் என்பதை நீங்களே கணக்கிட்டு கொள்ளுங்கள். என்னிடம் உள்ள கால்குலேட்டர் மற்றும் கணினி காண்பிப்பது, "INFINITIVE". 

இந்த வருமானம் அனைத்தும் அரசுக்கு கிடைத்திருக்க வேண்டும். அது மக்களை சென்று அடைந்து இருக்க வேண்டும். கிடைத்ததா? மக்களை சென்றடைந்ததா? நிச்சயம் இல்லை என்றுதான் ஒவ்வொருவரும் கூறவேண்டும். அப்படி என்றால் இந்த மக்கள் பணம் சட்டத்துக்கு புறம்பாக யாரிடமோ சென்று அடைந்துள்ளது. இந்த ஊழல் பணம் அடுத்த சில ஆண்டுகளில் தனது சொந்தநாட்டு மக்களையே தாக்கப்போகிறது. எப்படி..?

விலைவாசி உயரும். பொருளாதாரம் சீர்குலையும். "Above middle Class" மக்கள் நடுத்தர மக்களாகவும், நடுத்தர மக்கள் ஏழைகளாகவும், ஏழை மக்கள் இன்னும் ஏழைகளாகவும் மாறுவார்கள். ஜனநாயகம் வேரோடு அழியும். மனிதாபிமானம், மனிதநேயம் மண்ணோடு மண்ணாகும். ரௌடிசம், குற்றச் சம்பவங்கள் தலைவிரித்து ஆடும். கடந்த ஐந்தாண்டுகளாக ஆயுள் கைதியாக உள்ள நடுநிலை பத்திரிகைகள், இனி மரண தண்டனை கைதிகளாக மாற்றப்பட்டு தூக்கில் போடப்படும்.   

துரோகம் - 1

உரிமம் வாங்கிய அனைத்து நிறுவனங்களும் சுமார் ரூ.13,000 கோடிக்கும் அதிகம் மதிப்புள்ள (உதாரணம் S.TEL  நிறுவனம் ரூ.13000 கோடிக்கு வாங்க முன்வந்தது) அலைகற்றைகள் உரிமத்தை அடிமாட்டு விலைக்கு அதாவது 1200, 1300, 1650 கோடிகளுக்கு திட்டமிட்டு விற்கப்பட்டுள்ளது. அரசுக்கு சேர வேண்டிய, மக்களுக்கு சேர வேண்டிய வருவாய் சில சுய நலவாதிகளை சென்றடைந்துள்ளது.

துரோகம் - 2

பெரும்பாலான நிறுவனங்கள் தங்கள் உரிமத்தின் பங்குகளை வெளிநாட்டு நிறுவனங்களுக்கு விற்று கொள்ளை லாபம் பார்த்துள்ளனர். இதனால் அரசுக்கு அதாவது பல கோடி மக்களுக்கு கிடைக்க வேண்டிய அரசின் வருவாய் சில சுய நல தனி மனிதர்களை சென்று அடைந்துள்ளது.

துரோகம் - 3

தகுதி இல்லாமல் உரிமம் வாங்கிய 122 நிறுவங்களில் பெரும்பாலான நிறுவனங்கள் இன்னும் சேவையை தொடங்கவில்லை. இதில் "swan, Unitech" போன்ற லெட்டர் பேட் நிறுவனங்களும் அடங்கும். இந்த நிறுவனகள் ஏன் இன்னும் சேவையை தொடங்கவில்லை என்று உள்ளூர ஆராய்ந்தால் மிக தெளிவாக புரியும். பெரிய நிறுவனங்கள் போட்டி இல்லாமல் தொலைதொடர்பு துறையில் கொள்ளை லாபம் பார்க்க, அதாவது கட்டணம் என்ற பெயரில் மக்களின் உழைப்பை சுரண்ட பெரும்பாலான தகுதி இல்லாத பினாமி லெட்டர் பேட் நிறுவனங்கள் இன்னும் சேவையை தொடங்கவில்லை. இவை சேவையை தொடங்கி இருந்தால் சந்தையில் போட்டி அதிகமாகி கைபேசியில் பேசும் கட்டணம் இப்போது இருப்பதை விட மேலும் குறைந்திருக்கும். ஒரு வேளை இதற்காகத்தான் திட்டமிட்டு "S.TEL" போன்ற போட்டி நிறுவனங்களுக்கு உரிமம் வழங்கவில்லை என்ற சந்தேகம் தெளிவாக எழுகிறது.

துரோகம் - 4 

MTNL, BSNL போன்ற அரசு நிறுவனங்களுக்கு அதிக அளவில் அலைகற்றைகளை ஒதுக்கி போதிய ஆப்பரேடர்களை நியமித்து இருந்தால் கைபேசியில் பேசும் கட்டணம் நிமிடத்துக்கு வெறும் ஒரு பைசாவுக்கு வந்திருக்கும். மக்கள் அரசினால் பயன் அடைந்து இருப்பார்கள்.

துரோகம்-5

தகுதி இல்லாமல் உரிமம் வாங்கிய லெட்டர் பேட் நிறுவனங்கள் தனது பங்குகளை பல வெளிநாட்டு நிறுவனங்களுக்கு விற்றுள்ளனர். அதில் பாகிஸ்தான் போன்ற நாடுகளும் அடங்கும். இந்தியாவின் தொலை தொடர்பு துறையை இந்த நாடுகளும் பயன்படுத்துகின்றனர். இது உள்நட்டு மக்களின் பாதுகாப்புக்கு மிக பெரிய அச்சுறுத்தல்.

துரோகம்-6

நீரா ராடியா தொலைபேசி உரையாடல்கள், CAG, தொலைதொடர்பு துறை தொடர்பாக கைப்பற்றபட்ட ஆவணங்கள், சம்பந்தபட்ட பிரதமர் அலுவலக கடிதங்கள் புறகணிப்பு, சட்ட, நிதி துறை கடிதங்கள் புறகணிப்பு, TRAI பரிதுரைகள் புறகணிப்பு.. இப்படி அடுக்கடுக்காக ஆதாரங்கள், சாட்சிகள். முதலில் வருபவருக்கே முன்னுரிமை என்று முந்தைய ஆட்சியாளர்கள் வகுத்த அடிப்படை கொள்கை கூட பின்பற்றப்படவில்லை. அதிலும் முறைகேடு.

துரோகம்-7

இவ்வளவு குற்றங்கள் செய்தும் சம்பந்தபட்ட குற்றவாளிகள் செய்த தவறை ஒப்புக் கொள்ளாமல் நாங்கள் தவறு செய்யவில்லை என்று மக்களிடம் பொய் பிரசாரம் செய்வது மக்களுக்கு இழைக்கப்பட்ட ஏழாவது துரோகம். இதன் உச்சகட்டம்தான் 2G-யில் ஊழலும் இல்லை நஷ்டமும் இல்லை என்று மத்திய அமைச்சரின் பத்திரிகை பேட்டி. இந்த உலகத்திலே தான் மட்டும்தான் புத்திசாலி வக்கீல் மற்ற அனைவரும் அடி முட்டாள்கள் என்ற நினைப்பு.

துரோகம்-8

நடந்த அனைத்து தேச துரோகங்களும், குற்றங்களும் பொருளாதார மேதை பிரதமருக்கு தெரிந்தே கண்முன்னே நடந்துள்ளது. இருந்தும் பிரதமர் வாய் மூடி மௌனியாக இருப்பது மக்களுக்கு இழைக்கபடும் மகா மகா துரோகம்.

துரோகம்-9

ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் முறைகேடாக பெறபட்ட பணங்கள் பெரும்பாலானவை இந்தியாவில் புழக்கத்தில் இல்லாமல் அந்நிய நாடுகளில்,வங்கிகளில் முதலீடு செய்யப்பட்டுள்ளதாக தகவல். இந்த பணம் அரசுக்கு வருவாயாக கிடைத்து இருந்தால் ஏராளமான அரசு கல்லூரிகள், பள்ளிகள், பாலங்கள், மருத்துவமனைகள், தொழிற்சாலைகள் என்று உருவாக்கி அனைவருக்கும் கல்வி, வேலைவாய்ப்பு, அடிப்படை வசதிகள் என்று ஏற்படுத்தி ஏழைகளே இல்லாத நாட்டை உருவாக்கி இருக்கலாம். இலவசங்கள் பெறாத மக்களை கண்டிருக்கலாம்.

துரோகம்-10

ஸ்பெக்ட்ரம் ஊழல் பணத்தை பயன்படுத்தி ஏழை விவசாய மக்களிடம் மிரட்டி விளை நிலங்களை அடிமாட்டு விலைக்கு வாங்கப்பட்டதாக தகவல். இது மக்களுக்கு இழைக்கபட்ட துரோகம் எண் பத்து. ஒரு முறைகேட்டை செய்து அதையே மூலதனமாக வைத்து இன்னொரு முறைகேடு செய்யப்பட்டுள்ளது. ஊழல் செய்வதினால் மக்களுக்கு இழைக்கபடும் துன்பங்களுக்கு இதை விட சிறந்த உதாரணம் வேறென்ன வேண்டும். நண்டு கொழுத்தால் வலையில் தங்காது. இதுதான் ஊழலின் விளைவுகள். இவர்கள் ரத்தம் குடிக்கும் கொசுக்கள் மாதிரி. நம்மிடம் உள்ள ரத்தத்தை உறிஞ்சுவதோடு மட்டுமின்றி, நோய்க் கிருமிகளையும் நமது ரத்தத்தில் விட்டு செல்கின்றனர்.

இப்படி 2G ஊழலில் மக்களுக்கு இழைக்கபட்ட துரோகங்கள் எண்ணில் அடங்காதது. இந்த ஊழலின் தாக்கம் இதோடு நிற்காது. மக்களைத்தான் சுற்றி சுற்றி அடிக்கும். எப்படி?

ஊழல் பணத்தை வைத்து ஏழைகளின் நிலங்கள் அடிமாட்டு விலைக்கு வாங்கப்பட்டு, அதை பிளாட் போட்டு அதே மக்களிடம் அதிக விலை வைத்து விற்கப்படுகிறது. ஒரு ஏக்கரை குறைந்த விலைக்கு விற்ற மக்கள், அந்தப் பணத்தை வைத்து அதே இடத்தில் அதாவது முந்தைய சொந்த இடத்தில ஒரு கிரௌண்ட் நிலம் கூட வாங்க முடியவில்லை. இதுதான் ஊழலின் விளைவு. இப்போது புரிந்து இருக்கும் ஏழைகள் எப்படி உருவாகிறார்கள் என்று.

இது மட்டும் இல்லை. ஊழல் பணத்தை வைத்து அனைத்து இடங்களையும் வளைத்து போட்டு ரியல் எஸ்டேட் நடத்தும் அனைத்து அரசியல்வாதிகளும் இப்படி ஊழல் பணத்தில்தான் செய்கின்றனர். அவர்கள் சொல்வதுதான் விலை. விலைவாசி உயர்வது இயற்கை அல்ல. அனைத்தும் மிக மிக செயற்கையே. இயற்கை என்று ஆளும் கட்சியினர் கூறுவது தவறு. உண்மையை மூடி மறைக்கும் செயல். இது ரியல் எஸ்டேட் மட்டும் இல்லை. அனைத்து பொருள்களுக்கும் பொருந்தும். குறைந்த விகிதத்தில் உள்ள பணக்காரர்கள் மேலும் பணக்காரர்கள் ஆவார்கள். அதிக விகித்தில் உள்ள நடுத்தர மக்கள், ஏழைகள் மேலும் ஏழைகளாக ஆவார்கள். இந்த ஏழை, பணக்காரன் இடைவெளியை குறைக்கத்தான் அரசு ஒன்றை மக்கள் தேர்ந்தெடுக்கிறார்கள்.

இன்று ஆளும் வர்க்கத்தினரே அதற்கு முழு முதல் காரணமாக திகழ்கிறார்கள். சொல்லபோனால் அரசின் கடமைகளை அரசியல்வாதிகளும் மறந்துவிட்டனர். இவர்களை தேர்ந்தெடுக்கும் மக்களும் தங்கள் கடமைகளை மறந்து இலவசத்துக்கு பின் செல்கின்றனர்.

இலவசம் வாங்கும் மக்கள் ஒரு விஷயத்தை நன்றாக தெரிந்து கொள்ள வேண்டும். உங்கள் உழைப்பு என்னும் மூலதனத்தை மறந்து இலவசம் வாங்குவதால் எத்தனை தலைமுறைகள் கடந்தாலும் நீங்கள் ஏழைகளாகத்தான் இருக்க முடியும். உங்கள் வாழ்க்கை தரமும் உயரபோவதில்லை. இலசவசம் கொடுக்க தேவையான வரிப் பணத்தை செலுத்தும் உழைக்கும் மக்களின் வாழ்க்கை தரமும் உயரபோவதில்லை. இது நிச்சயம். மாற்றம் ஒன்றே மாறாதது. இலவசம் மாறவில்லை என்றால், உங்கள் வாழ்க்கை தரமும் மாறபோவதில்லை.







--
Thanks 

Madeswaran N
Ring : 9620966601