rss
twitter
    Find out what I'm doing, Follow Me :)

இது அம்மாவின் அறிக்கை !!!

அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா திருச்சியில் இன்று அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையை வெளியிட்டார். திமுக தேர்தல் அறிக்கையை விழுங்கிடும் அளவில் தனது வாக்குறுதிகளில் இலவச அறிவிப்புகளை அடுக்கியிருக்கிறார், ஜெயலலிதா!
அதன் முக்கிய அம்சங்கள்...

  • தமிழக மக்களுக்கு ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி தொடரும் என்ற நிலையை மாற்றி, குடும்ப அட்டைதாரர்கள் அனைவருக்கும் 20 கிலோ அரிசி இலவசமாகவே வழங்கப்படும்.
  • அரசு பள்ளிகளில் பயிலும் ப்ளஸ் 1, ப்ளஸ் 2 மாணவர்கள் அனைவருக்கும் இலவச லேப் - டாப்!.
  • அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் பயிலும் அனைத்து மாணவர்களுக்கும் இலவச லேப்டாப். கலை - அறிவியல் பொறியியல் என அனைத்து மாணவர்க்கும் இது பொருந்தும்.
  • வீடு இல்லாத ஏழைகளுக்கு வீடு கட்ட 3 சென்ட் நிலம் இலவசம்.
  • 10 முதல் 12-ம் வகுப்பு வரை அரசு, தனியார் கல்லூரிகளில் படிக்கும் அனைத்து மாணவர்களுக்கும் ரூ.1,000 முதல் ரூ.5,000 உதவித் தொகை
  • குடும்பத்தில் உறுப்பினர்கள் அனைவருக்கும் இலவச மருத்துவக் காப்பீடு செயல்படுத்தப்படும்.
  • ஏழைகளுக்கு வீடு கட்ட 1.8 லட்ச ரூபாய் மானியம்.
  • நடுத்தர மக்களுக்கு ரூ.1 லட்சம் மானியத்தில் 40 லட்சம் வீடுகள்.
  • பள்ளி மாணாக்கர்களுக்கு 4 ஜோடி சீருடை மற்றும் காலணிகள் ஆண்டுதோறும் வழங்கப்படும்.
  • கேபிள் டிவி தொழில் அரசுடைமையாக்கப்பட்டு ஏகபோகம் தடுக்கப்படும்.
  • அனைவருக்கும் அரசு கேபிள் டிவி இணைப்பு. அரசு மானியத்துடன் குறைந்த கட்டணத்தில் கேபிள் டிவி.
  • தற்போது வழங்க்கப்படும் திருமண உதவித் திட்டம் ரூ.25 ஆயிரத்துடன் அரை சவரன் தங்கம் வழங்கப்படும்.
  • தாய்மார்களுக்கு ஃபேன், மிக்ஸ், கிரைண்டர் ஆகியவை இலவசமாக வழங்கப்படும்.
  • அனைத்து கிராமங்களுக்கும் நகரங்களுக்கும் மும்முனை மின்சார இணைப்பு. இருண்ட தமிழகம் ஒளிமயமாக்கப்படும்.
  • மகப்பேறு காலச் சலுகையாக 6 மாத கால விடுமுறையும், ரூ.12 ஆயிரம் நிதி உதவி வழங்கப்படும்.
  • சாதிச் சான்றிதழ், இதர சான்றிதழ்கள் பள்ளியிலேயே வழங்கப்படும்.
  • அகதிகள் அனைவரும் தமிழகத்திலேயே கெளரவமாக வாழ நடவடிக்கை.
  • இலவச திட்டங்கள் அனைத்தும் தமிழக அகதிகள் முகாம்களுக்கும் நீட்டிப்பு.
  • இளநிலை - டிப்ளமோ படித்த பெண்களுக்கு ரூ.50 ஆயிரம் உதவித் தொகை.
  • கிராமங்களில் நடமாடு மருத்துவமனை
  • வறுமைக்கோட்டுக்கு கீழே உள்ள ஏழைகள் அனைவருக்கும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர்.
  • அரசு ஊழியர் நலன்களுக்கு பாதுகாப்பு. அனைத்து பிரச்னைகளும் பேசித் தீர்க்கப்படும்.
  • விவசாய தனிநபர் வருமானம் 3 மடங்காக உயர்த்த சிறப்புத் திட்டம்.
  • கரும்பு கொள்முதல் விலை டன்னுக்கு ரூ.2500 ஆக உயர்த்தப்படும்.
  • 58 வயது கடந்தவர்கள் அனைவருக்கும் உள்ளூர், பக்கத்தூர் செல்ல இலவச பஸ் பாஸ்.