rss
twitter
    Find out what I'm doing, Follow Me :)

கேரட் சாதம்


பச்சரிசி ஒருவருக்கு தேவையான அளவு
கேரட் 4
பச்சை மிளகாய் 2
மிளகுப் பொடி 2 ஸ்பூன்
உப்பு தேவைக்கு ஏற்ப
எண்ணை தேவைக்கு ஏற்ப
செய்முறை :
முதல்ல சாதத்தை வச்சிடுங்க . ரொம்ப குழைய விடாதீங்க. கலவை சாதத்திற்கு நன்றாக இருக்காது. கேரட்டை நல்லா பொடி பொடியா துருவிக்கணும். இப்ப வாணலிய அடுப்பில் வைத்து எண்ணை ஊத்தி பிறகு கடுகு போடவும். கடுகு வெடித்தப்பிறகு , மிளகாயை கிள்ளி போட்டு வதக்கிக்கொள்ளவும். இப்ப துருவி வச்சிருக்க கேரட்டை வாணலியில் கொட்டி நன்றாக வதக்கவும். கேரட் நன்றாக வதங்கியப் பிறகு உப்பு மற்றும் மிளகுப் பொடி போட்டு நன்றாக கிளறவும்.
இப்ப தயாரா இருக்கும் சாதத்தை இந்த துருவலில் கொட்டி கிளறினால் சுவையான கேரட் சாதம் தயார்.சூடாக இருக்கும் பொழுது சாப்பிட்டால் அருமையா இருக்கும். மிளகுப் பொடி இன்னும் கொஞ்சம் தேவை என்ற போட்டுக் கொள்ளவும்.
ரொம்ப சுலபமான சத்தான சாதம் இது