rss
twitter
    Find out what I'm doing, Follow Me :)

சிந்தனை துளிகள் - 2




மூன்று குதிரை வீரர்கள் ஒரு நாள் இரவு ஒரு பாலைவனத்தின் வழியே சென்று கொண்டிருந்தனர்.அப்போது ஒரு அசரீரி கேட்டது,''இங்கே இறங்குங்கள். இந்த இடத்திலிருந்து கிடைக்கக் கூடியதை எவ்வளவு எடுத்துச்செல்ல முடியுமோ அவ்வளவு எடுத்துச் செல்லுங்கள்.நாளை காலை நீங்கள் மகிழ்ச்சியும் கவலையும் அடைவீர்கள்.''
வீரர்கள் உடனே கீழே இறங்கி அந்த கடும் இருளில் தடவிப் பார்த்து கிடைத்த கற்களை பைகளில் நிரப்பி எடுத்துச் சென்றனர்.மறு நாள் காலை அவர்கள் அந்தப் பைகளை எடுத்துப் பார்த்த போது அந்தக் கற்கள் அனைத்தும் வைரமாக இருப்பதைக் கண்டனர்.ஒரு பக்கம் அவர்களுக்கு வைரங்கள் கிடைத்ததில் மகிழ்ச்சி.அதே சமயம் இன்னும் கொஞ்சம் கொண்டு வராமல் போனோமே என்று வருத்தம்.அசரீரி சொன்னது உண்மையாயிற்று.
வாழ்க்கையில் கல்வி என்பது ஒரு பெரிய சொத்து.வாலிப வயதில் நாம் படிப்பதன் மூலம் நிறைய நல்ல விசயங்களைக் கற்றுக் கொள்கிறோம்.. ஆனால் வயதான பின் இன்னும் கொஞ்சம் படித்திருக்கலாமே என்று வருத்தப் படுகிறோம்